சென்னை: ‘சீர்திருத்த திருமணச் சட்டம்’ இந்தியா முழுவதும் சட்டமாக வர வேண்டும் என திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்திய முதலமைச்ச்ர, மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.
திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் மகள் திருமணம் இன்று காலை நடைபெற்றது. இந்த திருமண விழாவில் தனது துணைவியார் துர்காவுடன் கலந்துக்கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பித்தார்.
நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சீர்த்திருத்த திருமணம் தமிழகத்தில் சட்டமாக இருப்பது போன்று இந்தியா முழுவதும் சட்டமாக வர வேண்டும். சீர்திருத்த திருமண சட்டம் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட வேண்டும். அதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் குரல் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதனைத்தொடர்ந்து பேசிய அவர், உள்ளாட்சி தேர்தல், நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல் என எந்த தேர்தல் வந்தாலும் திமுக தான் வெற்றி பெறும் என்றும் குறிப்பிட்டார்.