கோவை: ரீல்ஸ் மோகம் காரணமாக,   கோவையில் உள்ள பிரபல உணவகம் ஒன்றில் சாப்பிட வந்த இளஞ்ஜோடி, ‘ தாங்கள் சாப்பிட வாங்கிய பிரியாணியில்  பூச்சியை போட்டு சலசலப்பை ஏற்படுத்தியதுடன, அது தொடர்பான வீடியோயும் வைரலாக்கினர்.  விசாரணையில்,  அது திட்டமிட்ட செயல் என்பது தெரிய வந்துள்ளது.

இன்றைய இளைய தலைமுறையினரிடையே ரீல்ஸ் மோகம் தலைவிரித்தாடுகிறது. இதனால் தாங்கள் என்ன செய்கிறோம் என தெரியாமல்,  சட்டத்துக்கு புறம்பாக பல்வேறு செயல்களில் ஈடுபட்டு சர்ச்சையை ஏற்படுத்தி விடுவதுடன்,  இதன்மூலம் தாங்கள், மற்றவர்களும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டு வருவதை அறியாமல் உள்ளனர். இதுபோன்ற  ரீல்ஸ்களை பார்க்கும்,    மற்ற இளைஞர்களும் அவர்களை மிஞ்சி காணொலிகளை வெளியிட முயல்கின்றனர்.  சிலர், எல்லை மீறி செயல்படுவதும், விபரீதமான ரீல்ஸ்களையும் வெளியிட நினைத்து தங்களது உயிர்களை பலியாக்கி இருப்பதும் தெரிய வந்துள்ளது.

சமீபத்தில் இளைஞர் ஒருவர், ரயில் படுக்கையை கத்தியால் கிழித்து, அவற்றை ஜன்னல் வழியாக வீசி எறியும் காட்சியை ‘ரீல்ஸ்’ ஆக எடுத்து சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது. அதுபோல குமரி மாவட்டத்தில்,   இளைஞர்கள் சிலர் தாங்கள் பைக்கில் சாகசம் செய்வதை காணொலியாக எடுத்துத் தரும்படி அந்த வழியாக நடந்து சென்ற ஒருவரை கேட்டுட நிலையில், அவரும் ஆர்வ மிகுதியால் சாலையில் வாகனங்களை செல்வதை கவனிக்காமல் காணொலி பதிவு செய்வதில் தீவிரம் காட்டிய நிலையில்,  அந்த வழியே வேகமாக வந்த கார் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த பரிதாகம் ஏற்பட்டது.

இதுபோன்ற  தொடர் சம்பவங்களுக்கு முடிவு கட்ட வேண்டியதன் அவசியம் ஏற்பட்டுள்ளது. ரீல்ஸ்கள் வெளியிடுவது குறித்து,  சட்டப்பூர்வ நடவடிக்கை எடுப்பது குறித்தும் மத்திய, மாநில அரசுகள் ஆலோசிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில்தான்,  கோவை காந்திபுரத்தில் உள்ள உணவகத்தில் சாப்பிடவந்த இளஞ்ஜோடி ஒன்று, தங்களுக்கு வழங்கப்பட்ட  பிரியாணியில் பூச்சி இருந்ததாக கூறி, அதை  வீடியோ எடுத்து, கடை ஊழியர்களிடம் சண்டையிட்டு பணம் தராமல் சென்றுள்ளனர். பின்னர், அத் வீடியோவை தங்களது, இன்ஸ்டா பக்கத்திலும் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து,  சந்தேகமடைந்த உணவகத்தினர், கடையில் உள்ள அனைத்து  சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது, முறைகேடான ரீல்ஸ் வீடியோ வெளியிட்டட . சம்பந்தப்பட்ட இளைஞரும், அவருடன் வந்த பெண்ணும், தங்களுக்கு வழங்கப்பட்ட பிரியாணியில், தாங்கள் ஏற்கனவே எடுத்து வந்த  பூச்சிகளை  எடுத்து, பிரியாணி தட்டில் போட்டுவிட்டு, பின்னர், பிரியாணியில் பூச்சி கிடப்பதாக கூறி  திட்டமிட்டு அவதூறு பரப்பியது தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து உணவகம் தரப்பில்   கோவை காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. புகாரின் பேரில் காவல்துறையினர் ரீல்ஸ் ஜோடியை தேடி வருகின்றனர்.