சென்னை: தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் வார்டுகள் மறுவரையறை செய்யப்படுவது குறித்து அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.

கடநத் அதிமுக ஆட்சியில்,   செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தென்காசி, நெல்லை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட 9 மாவட்டங்கள் பிரிக்கப்பட்டன. இந்த மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று முடிவடைந்த நிலையில், நகராட்சி, மாநகராட்சி தேர்தல்கள் நடைபெற உள்ளன.

இந்த நிலையில்,  புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் நகராட்சி, பேரூராட்சிகளை மறுவரையறை செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும்,நகராட்சி மற்றும் பேரூராட்சிகளின் எல்லைகளை வரையறை செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.