திருத்தணி அருகே குளத்து நீரில் பதுக்கி வைத்திருந்த ஒருடன் செம்மர கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த சீனிவாசபுரம் கிராமத்தில் பொது குளம் உள்ளது. அக்குளத்தில் குளிக்க சென்ற ஒருவர், குளத்துக்கு அடியில் ஏராளமான செம்மரம் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து போலீசாருக்கு அவர் அளித்த தகவலின் அடிப்படையில், திருத்தணி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். குளத்து நீருக்கு அடியில் இருந்த செம்மரக் கட்டைகளை பறிமுதல் செய்தனர். பின்னர் செம்மரக் கட்டைகளை திருத்தணி வனத்துறையிடம் போலீசார் ஒப்படைத்தனர். ஒரு டன் செம்மர கட்டைகள் அங்கிருந்து எடுக்கப்பட்டது.
இதுபற்றி திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். வேனில் செம்மரம் கடத்தி சென்ற மர்ம நபர்கள் ஆடி கிருத்திகையை முன்னிட்டு போலீசாரின் தீவிர வாகன சோதனை நடத்தப்படுவதால் குளத்தில் செம்மரங்களை பதுக்கிவைத்து தப்பியிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். இதையடுத்து செம்மரக் கட்டைகளை பதுக்கிவைத்து சென்ற மர்ம நபர்களை போலீசார் ேதடி வருகின்றனர்.