ஊட்டி
அதிகனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்துக்கு ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது.
தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால்கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. இங்கு அடுத்த 3 நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
தமிழ்நாட்டிலும் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதில் நீலகிரியில் பெய்து வரும் தொடர் கனமழையால் பல இடங்களில் நிலச்சரிவும், வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையி மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது
அதிகனம்ழை காரணமாக நீலகிரி மாவட்டத்துககு அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது..
வானிலை ஆய்வு மையம் இது குறித்து,
“மத்தியமேற்கு மற்றும் வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நாளை மறுநாள் (ஜூலை 19) காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்றும், நாளையும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் அதி கனமழை பெய்யது வாய்ப்புள்ளது. அதேபோல், கோவையின் மலைப்பகுதிகளில் இன்றும், நாளையும் மிக கனமழை பெய்யும்”
என்று தெரிவித்துள்ளது.