சென்னை
தமிழகத்துக்கு மிக கனமழை காரணமாக விடப்பட்டுள்ள ரெட் அலர்ட் திரும்பப் பெறப்பட்டுள்ளது.
சென்னை அருகே 30 கிமீ தூரத்தில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மையம் தற்போது கரையைக் கடந்துக் கொண்டு உள்ளது. இதனால் தரைக் காற்று வேகமாக வீசும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இனி மிகக் கனமழைக்கு வாய்ப்புக்குறைவு என அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது சென்னையில் தொடர் மழை பெய்து வருவதால் மரங்கள் சாய்வதும் விளம்பரப் பலகைகள் விழுவது போன்ற சம்பவங்கள் ஏற்படும் எனவே மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தற்போது சென்னையில் அதி கன மழைக்கான வாய்ப்பு குறைவு என்றாலும் பலத்த காற்றுக்கான எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
அதாவது சென்னையில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் வாபஸ் பெறப்படுவதாகவும், இருந்தாலும் காற்றுக்கும் கனமழைக்குமான ரெட் அலர்ட் தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆபத்தை உணராமல் மெரினா கடற்கரையில் குவிந்த பொதுமக்களை காவல்துறையினர் வெளியேற்றி வருகின்றனர்.