சென்னை: திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 6 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ள நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் 4 நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், திருவள்ளூர், ராணிப்பேட்டை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு நாளை அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும், நீலகிரி, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் நாளை மறுநாள் அதி கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், அதனால் குறிப்பிட்ட 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ஜான் வர்கீஸ் உத்தரவிட்டுள்ளார்.