திருவனந்தபுரம்: கேரளாவில் 24 மணி நேரத்தில் 11,755 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

கேரளாவில் இன்று கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 95 ஆயிரத்து 918 ஆக உள்ளது. இன்று மட்டும் கொரோனா தொற்றுக்கு 23 உயிரிழந்து உள்ளனர்.
இதன் மூலம் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 978 ஆக உள்ளது. இன்று ஒரே நாளில் 7 ஆயிரம் பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணம் பெற்று உள்ளனர்.
கேரளாவில் தொற்று பாதிப்பில் இருந்து 1 லட்சத்து 82 ஆயிரம் பேர் குணம் பெற்றுள்ளனர். திருவனந்தபுரம், கோழிக்கோடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் இன்னமும் கொரோனா பாதிப்பு ஆயிரத்திற்கும் மேல் பதிவாகி இருக்கிறது.

[youtube-feed feed=1]