சென்னை: அக்டோபர் 4ந்தேதி முதல் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறக்க பரிந்துரைக்கப்பட்டு இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்து உள்ளார்.
தமிழ்நாட்டில், கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்ட கல்வி நிலையங்கள் படிப்படியாக திறக்கப்பட்டு வருகின்றன. செப்டம்பர் 1ந்தேதி முதல் உயர்நிலை, மேல் வகுப்புகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு உள்ளன. இதையடுத்து, அடுத்தக்கட்டமாக 6முதல் 8ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதற்காக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டத்தை நடத்தினார். அதுதொடர்பான ஆய்வறிக்கை முதல்வரிடம் வழங்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, முதல்வரிடம் பள்ளிகள் திறப்பு குறித்து பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பது குறித்தும், அடுத்தக்கட்டமாக அக்டோபர் முதல் 6 முதல் 8ம் வகுப்பு வரையிலான பள்ளிகளை திறக்க பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. முதல்வர் மருத்துவ நிபுணர்களிடம் ஆலோசனை நடத்திவிட்டு இது குறித்து தெரிவிப்பார் என்று கூறினார்.