லண்டன்: இங்கிலீஷ் கால்பந்து லீக்கில், முதல் பெண் நடுவராக செயல்படும் அரிய வாய்ப்பை பெற்றுள்ளார் ரெபக்கா வெல்ச். இவர், ஹர்ரோகேட் டவுன் மற்றும் போர்ட்வேல் ஆகிய இடங்களில் நடைபெறும் போட்டிகளுக்கு நடுவராக செயல்படுவார் என்று தெரிவிக்கப்படுகிறது.
இவர், இதற்கு முன்பாக, தேசிய லீக் ஆண்கள் போட்டிகளின் நடுவராக இருந்துள்ளார் மற்றும் கடந்த 2017ம் ஆண்டின் எஃப்ஏ கோப்பை பெண்கள் கால்பந்து இறுதிப்போட்டியிலும் நடுவராக செயல்பட்டுள்ளார். தற்போது இங்கிலீஷ் கால்பந்து லீக்கிலும் நடுவராக செயல்படும் புதிய வாய்ப்பினை பெற்றுள்ளார்.
இந்த இங்கிலீஷ் கால்பந்து லீக் தொடரைப் பொறுத்தவரை, கடந்த 2010ம் ஆண்டு நடைபெற்ற போட்டியொன்றில், ஆட்டத்தின் பாதியிலேயே காயம்பட்ட நடுவருக்கு பதிலாக செயல்படும் வாய்ப்பை பெற்றார் அமி ஃபியர்ன் என்ற பெண் நடுவர். அந்தவகையில், இத்தொடரில் நடுவராக பணியாற்றிய முதல் பெண் அவர்தான்.
ஆனால், அதிகாரப்பூர்வமாக போட்டிக்கு முன்னதாகவே அறிவிக்கப்பட்டு, நடுவராக முழுமையாக பங்காற்றவுள்ள முதல் பெண் ரெபக்கா வெல்ச் என்பது குறிப்பிடத்தக்கது.