டில்லி
மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீச்ல் மீதான வரியைக் குறைத்து அ|அறிவித்துள்ளது குறித்த. தகவல் இதோ
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் எண்ணெய் நிறுவனங்கள் தினசரி பெட்ரோல் மற்றும் டீசல் விலையை அறிவித்து வருகின்றன. தற்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருகிறது எனபதால். இந்தியாவில் தினசரி பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஏறுமுகமாகக் காணப்படுகிறது.
பெட்ரோல் விலை நாட்டின் பல இடங்களில் ரூ.100ஐ தாண்டி உள்ளது. இந்நிலையில் மத்திய அர்சு இன்று பெட்ரோல் மற்றும் டீசலுக்கான வரியை குறைத்து அறிவித்துள்ளது. அதன்படி பெட்ரோலுக்கு 5 ரூபாயும் டீசலுக்கு 10 ரூபாயும் வரி குறைக்கப்பட்டுள்ளது. இந்த வரிக் குறைப்பு நாளை முதல் அமலுக்கு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது..
இதுவரை பெட்ரோல் மற்றும் டீசவ் வரியைக் குறைக்க பொதுமக்களும் எதிர்க்கட்சியினரும் பல முறை கோரிக்கை விடுத்தும் செவிசாய்க்காத மத்திய அரசு தானாக முன்வந்து வரியை குறைத்தது ஏன் என்னும் கேள்வி பலருக்கும் எழுந்து வருகிறது. நடந்து முடிந்த இடைத் தேர்தலே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.
இந்த இடைத் தேர்தல்களில் பாஜக மேற்கு வங்கத்தில் அனைத்து இடங்களில் தோல்வி அடைந்துள்ளது. இதைப் போல் மத்தியப் பிரதேசம், அசாம், மேகாலயா ஆகிய தொகுதிகளிலும் பாஜக முழு வெர்றி பெறவில்லை. மக்களவை இடைத் தேர்தலிலும் சிவசேனா வென்று பாஜக 3 இடங்களிலும் தோல்வியை தழுவி உள்ளது.
இந்த தோல்விக்கு முக்கிய காரணம் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு என மக்கள் கருதுகின்றனர். அடுத்த வருடம் உத்தரப்பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் பாஜகவுக்குத் தோல்வி பயம் வந்துள்ளதாகவும் அதனால் இந்த வ்ரிக்குறைப்பு எனவும் அரசியல் ஆர்வலர்கள் கூருகின்றனர்.