டில்லி

ந்தியாவில் உள்ள வங்கிகள் கடந்த சில வருடங்களாக மாணவர்களுக்குக் கல்விக் கடன் அளிப்பதை நிறுத்தி வருகிறது.

இந்தியாவில் உள்ள வங்கிகளில் முன்பு அதிக அளவில் கல்விக் கடன்கள் வழங்கப்பட்டு வந்தன.    மத்திய மாநில அரசுகள் இவ்வாறு கல்விக் கடன் அளிப்பதை ஊக்குவித்து வந்தன.    இவ்வாறு கடன் அளிப்பதற்கு வங்கிகள் ரூ.4 லட்சம் வரை உள்ள கடன்களுக்கு எவ்வித பிணையும் அளிக்க வேண்டியது கிடையாது.

அதைப் போல் ரூ.4 லட்சத்தில் இருந்து ரூ.7.5 லட்சம் வரையிலான கடன்களுக்குத் தனி மனித பிணை அளிக்க வேண்டும் அதற்கு மேற்பட்ட கடன்களுக்குக் கடன் தொகைக்கு ஈடான சொத்துக்களைப் பிணையாக அளிக்க வேண்டும்.   ஆனால் இந்த கடன் தொகை அதிகமாக இருந்தாலும் அரசியல் தலையீட்டால் பல மாணவர்களுக்கு போதிய அளவுக்குப் பிணை இல்லாமல் அளிக்கப்படு வந்தது.

இந்தியாவில் உள்ள அனைத்துக் கட்சிகளும் மாணவர்களுக்குக் கல்விக் கடன் பெறச் சிபாரிசு செய்து வந்தன.  வங்கிகளுக்கு இந்தக் கடனை திரும்பப் பெறுவதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.  கடன் விதி முறைப்படி மாணவர்கள் கல்வி கற்று பணியில் சேர்ந்த 6 மாதங்களில் இருந்து இந்தக் கடனை மாதத் தவணைகளாகா செலுத்த வேண்டும்.

ஆனால் தற்போது கல்வி முடித்து வரும் மாணவர்களில் ஏராளமானோருக்கு வேலை கிடைக்காத நிலை உள்ளது.  மேலும் அவ்வாறு வேலை கிடைத்தவர்களுக்கும் கல்விக்கேற்ற ஊதியத்தில் பணி கிடைப்பதில்லை.  எனவே அவர்களால்  கடனைத் திரும்பச் செலுத்த இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.  மேலும் வங்கிகளிடம் கடன்  தொகைக்கு ஏற்றபடி பிணையாகச் சொத்துக்கள் இல்லை.

எனவே மாணவர்களுடைய கல்விக்கடன்களில் பெரும்பாலானவை வாராக்கடன்களாகி உள்ளன.   இவ்வாறான வாராக்கடன்களான கல்விக்கடன்களில் பெரும்பாலானவை பொறியியல் மாணவர்களின் கடன்களாகும்.  அதற்கு அடுத்தபடியாக  செவிலியர் மாணவர்களின் கடன்கள் உள்ளன.   இந்த இரு பிரிவுகளிலும் மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துள்ளதால் போதுமான வேலை வாய்ப்பு இல்லை.

தற்போது நாட்டில் கடந்த 45 வருடங்களில் இல்லாத அளவுக்கு வேலை இன்மை அதிகரித்துள்ளது.   அது மட்டுமின்றி அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் விசா சட்டத்தைக் கடுமையாக்கி உள்ளதால் மாணவர்களுக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்பு கிடைப்பதும் எளிதாக இல்லை.   இதனால் வங்கிகள் மாணவர்களுக்குக் கடன் அளிப்பதைக் கிட்டத்தட்ட நிறுத்தி உள்ளன.   ஓரளவுக்கு வழங்கப்பட்டுள்ள கல்விக் கடன்களும் மற்ற கடன்களுடன் ஒப்பிடும் போது மிகவும் குறைவாகவே உள்ளன.