டில்லி

னில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தை சேர்ந்த ரிலையன்ஸ் டி டி எச் தனது சேவையை நிறுத்துக் கொள்ளப்போவதாக அறிவித்துள்ளது.

டி டி எச் என்பது டிஷ் ஆண்டெனா மூலம் வீடுகளுக்கு நேரடியாக பல தொலைக்காட்சி சேனல்களை காண வசதி செய்யும் சேவையாகும்.  தற்போது ஆறு நிறுவனங்கள் இந்த சேவையை அளித்து வருகின்றன.  டிஷ் டிவி இந்தியா லிமிடட், ரிலையன்ஸ் டிஜிடல் லிமிடட், டாடா ஸ்கை லிமிடட், விடியோகோன் லிமிடட், சன் டைரக்ட் பி லிமிடட், மற்றும் பாரதி டெலிமீடியா லிமிடட் ஆகியவை டி டி எச் சேவையை செய்து வருகிறது.

சமீபத்தில் ரிலையன்ஸ் டிஜிடல் லிமிடெட், “வரும் நவம்பருடன் எங்களது லைசன்ஸ் முடிவு பெறுவதால் நாங்கள் இந்தியா முழுவதும் உள்ள எங்களது டி டி எச் சேவையை வரும் நவம்பர் 18ஆம் தேதியுடன் நிறுத்திக் கொள்கிறோம்.   சந்தாதாரர்கள் மாற்று ஏற்பாடுகளை செய்துக் கொள்ள வேண்டுகிறோம்.  நாங்கள் செலவின்றி மாற்றிக்கொள்ள மூன்று மற்ற டி டி எச் சேவை நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டு இருக்கிறோம்.  விரைவில் எந்த ஒரு கட்டணமும் இன்றி மாறுதலுக்கான திட்டங்கள் வெளியிடப்படும்” என அறிவித்துள்ளது.

பெயர் தெரிவிக்க விரும்பாத டி டி எச் நிறுவன அதிகாரி ஒருவர், “நஷ்டம் அதிகமாகி வருவதாலேயே ரிலையன்ஸ் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.   ஏற்கனவே சன் டைரக்ட் நிறுவனத்துடன் இணைய நடந்த முயற்சி தோல்வி அடைந்ததும் இந்த மூடுதலுக்கு மற்றொரு காரணம்.   மற்ற டி டி எச் நிறுவனங்களுடன் போட்டியிட முடியாத நிலையில் தற்போது ரிலையன்ஸ் உள்ளது.  ஜியோ இதே சேவையை மிகக் குறைந்த கட்டணத்துடன்  ஆரம்பிக்கப் போவதாக வந்த செய்தி ரிலையன்ஸ் டிஜிடல் நிறுவனத்துக்கு அச்சத்தை உண்டாக்கி விட்டது” என கூறி உள்ளார்.