டில்லி

ந்தியாவில் மிகவும் குறைந்த எண்ணிக்கையிலான மக்களே ஒமிக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸின் திரிபான ஒமிக்ரான் உலகெங்கும் வேகமாகப் பரவியது..   முக்கியமாக அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது.   இந்த பாதிப்பு இந்தியாவிலும் பரவத் தொடங்கியதால் அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தது.  

அதே நேரம் இந்தியாவில் மூன்றாம் அலை கொரோனா பரவலும் அதிகரிக்கத் தொடங்கியது.   ஆனால் இந்தியாவில் ஒமிக்ரானால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை மற்ற நாடுகளைக் காட்டிலும் மிகவும் குறைந்த அளவில் காணப்பட்டது.    இதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்றாக மக்களின் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு எனக் கூறப்படுகிறது.

இது குறித்து விஞ்ஞானிகள்

இந்த எதிர்ப்புச் சக்தி அதிகரிப்பு தடுப்பூசி மற்றும் ஏற்கனவே பாதிப்பு அடைந்தோரின் உடலில் உள்ள உள்ள ஆண்டி பாடிகளால் ஏற்பட்டுள்ளது.   ஏற்கனவே நோயால் தாக்கப்பட்டவரின் உடலில் அதிக அளவில் எதிர்ப்பு சக்தி ஏற்படும் என்பது நான் நன்கு அறிந்த தகவல் ஆகும்.  மேலும் அவர்கள் தடுப்பூசி போட்டு கொண்டதால் அந்த சக்தி மேலும் அதிகரித்துள்ளது.

இந்தியாவில் இரண்டாம் அலை கொரோனா பாதிப்பு ஏற்பட்ட போது 70% க்கும் அதிகமானோருக்கு டெல்டா பாதிப்பு ஏற்பட்டது.   இதையொட்டி தடுப்பூசிகள் போடும் பணி அதிகரிக்கப்பட்டது.   அதன்படி சுமார் 95% பேர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.  எனவே இந்திய மக்கள் தொகையில் ¾ பாகம் பேருக்கு எதிர்ப்புச் சக்தி அதிகரித்துள்ளது. 

இதனால் ஒமிக்ரான் பரவலை மட்டுமின்றி மூன்றாம் அலை கொரோனாவையும் இந்திய மக்களால் சுலபமாகச் சமாளிக்க முடிந்தது.   தடுப்பூசி வீரியம் காரணமாக ஒரு டோஸ் தடுப்பூசி போட்ட சுமார் 65% பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு ஏற்படவில்லை…  மேலும் மக்கள் தொகையில் 60% பேர் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டதால் பலர் ஒமிக்ரான் பாதிப்பில் இருந்து தப்பி உள்ளனர்.”

எனத் தெரிவித்துள்ளனர்.