எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘லாபம்’ படத்தில் விஜய் சேதுபதிக்கு நாயகியாக நடித்து வருகிறார் ஸ்ருதி ஹாசன்.

சமீபத்தில் “கோவிட் என்பது ஆரோக்கியத்துக்கு வரும் தீவிரமான ஒரு ஆபத்து. இந்தத் தொற்றுப் பிரச்சினை இன்னும் முடியவில்லை. விதிமுறைகள் ஒழுங்காகப் பின்பற்றப்படவில்லை என்றால் ஒரு தனி நபராக, நடிகையாக எனது பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க எனக்கு உரிமை இருக்கிறது” என ஸ்ருதி ஹாசன் ட்வீட் செய்திருந்தார்.

இது சாதாரண ட்வீட் என பலரும் கடந்து சென்றனர். ஆனால், ‘லாபம்’ படக்குழுவினர் மீதான அதிருப்தியில்தான் இந்த ட்வீட்டை ஸ்ருதி ஹாசன் வெளியிட்டுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

படப்பிடிப்பில் விஜய் சேதுபதியைப் பார்க்க ரசிகர்கள் குவிந்திருக்கிறார்கள். அவர்களைச் சந்தித்து செல்ஃபி எடுத்து, கை குலுக்கிவிட்டுத் திரும்பியிருக்கிறார் விஜய் சேதுபதி என்பது குறிப்பிடத்தக்கது