சென்னை: வாங்கிய கடனுக்காக பல கோடி மதிப்புள்ள 14 ஏக்கர் நிலத்தை தனது பெயருக்கு எழுதிதரச் சொல்லி மிரட்டல் விடுத்த கடலூர் மாவட்ட பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டு உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை சூளைமேடு, சித்ரா அவென்யூ பகுதியைச் சேர்ந்தவர் மூர்த்தி. இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் கிராமப்புற பகுதிகளில் உள்ள காலி நிலங்களை வாங்கி விற்பனை செய்து வருகிறார். அதன்படி, இவர் செங்கல்பட்டு மாவட்டம், பாலூர் பகுதியில் நிலங்கள் வாங்குவதற்கு கடலூர் மாவட்ட பா.ஜ.க கட்சியின் மாவட்ட துணை தலைவர் சிவகுமார் உதவி புரிந்து வந்ததாக கூறப்படுகிறது. அதன்படி அவரிடடம் ரூ. ரூ.3 கோடி பணம் கடனாக பெற்று பாலூர் பகுதியில் 14.8 ஏக்கர் நிலம் வாங்கி, அதை பிளாட் போட்டு விற்பனை செய்து வந்துள்ளார்.
ஆனால், பிளாட்டுகள் முறையாக விற்பனையாததால்,. அவரால் கடனை திருப்பி செலுத்த முடியவில்லை என்ற கூறப்படுகிறது. அதனால், அந்த நிலத்தை, விற்றுத்தரும்படி மூர்த்தி கடன் வாங்கிய சிவகுமாரிடமே கேட்டுள்ளார்.மேலும் நிலங்கள் விற்பதற்கு கமிஷன் தருவதாகவும் கூறியுள்ளார்.
ஆனால், நிலம் விற்பனையாகாத நிலையில், கடனுக்கு பதிலாக முழு இடத்தையும் தனக்கே எழுதி தரும்படி கோரியுள்ளார். இதுதொடர்பாக இருவருக்கம் இடையே தகராறு எழுந்துள்ளது. அதைத்தொடர்ந்து சிவகுமார், பேரை அழைத்துக் கொண்டு மூர்த்தி அலுவலகத்திற்கு சென்று பாலூர் பகுதியில் வாங்கியுள்ள 14.8 ஏக்கர் நிலத்தை தனது பெயருக்கு எழுதித்தரும்படி மிரட்டியுள்ளார்.
இதுகுறித்து மூர்த்தி சூளைமேடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரின் பேரில் போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையை தொடர்ந்து கடலூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட துணை தலைவர் சிவகுமாரைகைது செய்து விசாரணை செய்தனர்.மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய மற்ற நபர்களையும் கைது செய்ய போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.