டில்லி:
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை, மிகக் கவலைக்கிடமாக இருப்பதாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில், தமிழக அரசு விரும்பினால், மத்திய படையை அனுப்ப தயார் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இன்று தமிழக கவர்னரை தொடர்புகொண்டு தமிழக சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து விசாரித்தார்.
சட்டம் ஒழுங்கு வழமைபோல் இருப்பதாகவும், நிலைமை இயல்பாக இருப்பதாகவும் கவர்னர் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுதும் லட்சம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மத்திய உள்துறை துணை அமைச்சர் கிரன் ரஜிஜூ, “தமிழக அரசு விரும்பினால் மத்திய படையை அனுப்ப மத்திய அரசு தயாராக இருக்கிறது. ஆனால் தன்னிச்சியாக அனுப்பமுடியாது. தமிழக அரசு விரும்பினால் அனுப்புவோம்” என்றார்.
Patrikai.com official YouTube Channel