டெல்லி: மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க தயார் என மத்தியஅரசு அறிவிப்பு  வெளியிட்ட நிலையிலும், இன்றைய நாடாளுமன்ற கூட்டத்தொடர், எதிர்க்கட்சிகளின் அமளியால்  இரு அவைகளும்  ஒத்திவைக்கப்பட்டது.

மணிப்பூர் விவகாரத்தை எழுப்பி நாடாளுமன்ற இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் 2ம் நாளாக அமளியில் ஈடுபட்டுள்ளனர். எதிர்க்கட்சிகளின் கடும் அமளி காரணமாக நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. மக்களவை 12 மணி வரையும் மாநிலங்களவை பிற்பகல் 2.30 மணி வரையும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் செய்தியாளர்களிடம் பேசிய மத்தியஅமைச்சர் ராஜ்நாத்சிங், மணிப்பூர் விவகாரம் குறித்து மத்திய அரசு விவாதிக்க தயாராக உள்ளது. ஆனால் எதிர்க்கட்சிகளி தேவையில்லாமல் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். மணிப்பூர்  வன்முறை குறித்து  நாடாளுமன்றத்தில் விவாதிக்க விடாமல் சில கட்சிகள் தடுத்து வருகின்றன என குற்றம் சாட்டினார்.

முன்னதாக நேற்று செய்தியாளர்கiள சந்தித்த மத்திய நாடாளுமன்ற விவகாரங்களுக்கான இணை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் . இந்தப் பிரச்னை குறித்து விவாதிக்கவும், விவாதிக்கவும் நாங்கள் தயாராக உள்ளோம் . “பெண்களின் கண்ணியம், வடகிழக்கு மற்றும் எல்லை மாநிலம் தொடர்பான மிகவும் முக்கியமான விஷயம் என்பதால், தங்கள் நிலைப்பாட்டை மீண்டும் மீண்டும் மாற்றிக் கொள்ள வேண்டாம், அரசியலில் ஈடுபட வேண்டாம் என்று எதிர்க்கட்சிகளுக்கு நான் வேண்டுகோள் விடுக்க விரும்புகிறேன் என  தெரிவித்தார்.