சென்னை,

ட்சியில் இருந்து ஒதுங்கியிருக்க தயார் என்றும், நேற்றிலிருந்தே கட்சியில் இருந்து ஒதுங்கி விட்டதாக டிடிவி தினகரன் கூறினார்.

இன்று செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி, கட்சியில் இருந்து ஒதுங்கியிருக்க தயார் என்றும், நேற்றிலிருந்தே கட்சியில் இருந்து ஒதுங்கி விட்டதாகவும், ஆனால், துணைப்பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலக முடியாது என்றும் கூறினார்.

கட்சி பதவி எனக்கு கொடுத்தது பொதுச்செயலாளர் சசிகலாதான். அவர் கேட்டுக்கொண்டால் மட்டுமே முடிவு எடுக்க முடியும்.

என்னை நீக்குவதால் அவர்களுக்கு நன்மை கிடைத்தால் நீக்கட்டும் என்றும்,  கட்சியோ, ஆட்சியோ பலவீனப்பட நான் காரணமாக இருக்கமாட்டேன் என்றும் கூறினார்.

இன்று எந்தவித கூட்டமும், போட்டி கூட்டமும் இல்லை என்றும், அமைச்சர்கள் என்னை ஒதுக்கியதால் நான் வருத்தப்படவில்லை என்றும் கூறினார்.

யாரோ சிலருக்கு ஏற்பட்ட பயத்தின் காரணமாக இவ்வாறு முடிவு செய்யப்பட்டுள்ளது. அவசர கதியில் அமைச்சர்களை முடிவை அறிவித்து உள்ளனர்.

மேலும், இதற்கு பின்னணியில் பாரதியஜனதா உள்ளதா என்பது பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்றும் கூறினார்.

தினகரனின் இன்றைய அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் மேலும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

கட்சியில் இருந்து ஒதுங்குவதாக அறிவிக்கும் தினகரன் கட்சியின் துணைபொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகமாட்டேன் என்று கூறியிருப்பது மேலும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.