சென்னை:
எவ்வளவு பெரிய மழை பெய்தாலும் அதனை எதிர்கொள்ள அரசும் சென்னை மாநகராட்சியும் தயார் நிலையில் உள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வடசென்னை பகுதியில் மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், எவ்வளவு பெரிய மழை பெய்தாலும் அதனை எதிர்கொள்ள அரசும் சென்னை மாநகராட்சியும் தயார் நிலையில் உள்ளது என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், அதீத கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள மயிலாடுதுறை, சீர்காழி கடலூரில் நாளை ஆய்வு செய்கிறேன் அதற்காக இன்று இரவு புறப்பட்டு செல்கிறேன் என்றார்.
Patrikai.com official YouTube Channel