புதுடெல்லி:
கொரோனா அறிகுறியுள்ளவர்களுக்கு, ரேபிட் ஆன்டிஜென் பரிசோதனையில், கொரோனா இல்லை என வந்தாலும் அவர்களுக்கு மறுபரிசோதனை செய்ய வேண்டும் என மாநில அரசுகளுக்கு, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அவர்களுக்கு ஆர்டி- பிசிஆர் சோதனை நடத்தி கொரோனா குறித்து உறுதி செய்ய வேண்டும். கொரோனா உறுதியானவர்கள், மற்றவர்களுக்கு பரப்புவதை அனுமதிக்கக்கூடாது என மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு சுகாதார அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து சுகாதார அமைச்சகம் வெளியிட்ட உத்தரவில்

  • அறிகுறி இருந்தாலும், கொரோனா நெகட்டிவ் என வந்த அனைவருக்கும் மறுபரிசோதனை கட்டாயம்
  • ரேபிட் கிட் பரிசோதனையில் கொரோனா இல்லை என வந்தாலும் சிலருக்கு அறிகுறி உள்ளதாக தெரிகிறது
  • கொரோனா உறுதி செய்யப்பட்ட நபர்களை தவறவிடவில்லை என்பதை மாநிலங்கள் உறுதிப்படுத்த வேண்டும்

  • தவறாக நெகட்டிவ் என சான்றழிக்கப்பட்டவர்களை கண்டறிந்து மருத்துவமனையில் சேர்க்க வேண்டும்
  • ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு அதிகாரி அல்லது ஒரு குழுவை நியமித்து கண்டறிய வேண்டும்
  • ரேபிட் சோதனை விவரங்களை பகுப்பாய்வு செய்து, கொரோனா இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்.
  • இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.