பெங்களூர்:

நேற்று இரவு நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 17வது லீக் போட்டியில்  சொந்த இடத்தி லேயே பெங்களூரு அணியை கொல்கத்தா அணி தூக்கி வீசியது. ஆந்த்ரே ரஸ்செல்லின் சிக்ஸர் மழையின் அதிரடி ஆட்டத்தால் கொல்கத்தா அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது.

பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும்  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான 17-வது லீக் போட்டி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.  இதனையடுத்து  முதலில் களமிறங்கிய  பெங்க ளூர் அணி  20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் எடுதது.  பெங்களூர் அணி கேப்டன் விராட்கோலி அதிரடியாக ஆடி பெங்களூர் அணியில் அதிகபட்சமாக  விராட் கோலி 84 (49 பந்து) ரன்கள்,  டிவில்லியர்ஸ் 63 (32 பந்து) ரன்கள் எடுத்தனர். தங்களின் வெற்றி உறுதி என்று நினைத்தி ருந்தனர். கொல்கத்தாவுட்ககு 206 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

டுத்து களமிறங்கியது கொல்கத்தா அணி. தொடக்க ஆட்டக்காரர்களாக லயன் மற்றும் சுனில் நரைன் களமிறங்கினர். சுனில் நரைன் 10 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த நிலையில் லயனுடன் உத்தப்பா ஜோடி சேர்ந்து ஆடினர். 33 ரன்கள் எடுத்து உத்தப்பாவும் 43 ரன்கள் எடுத்து லயனும் வெளியேறினர். ரானா அதிரடியாக விளையாடி 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.   அதனை தொடர்ந்து கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக் 17 ரன்களுடன் வெளியேறிய நிலையில், ஆறாவது ஆட்டக்காரராக ரஸ்செல் களமிறங்கினார். ஆட்டம் சூடுபிடித்தது.

தனது ருத்திர தாண்டவத்தை காட்டினார் ரஸ்செல். ரஸ்செலின் அதிரடியால் பந்துக்கள் நாலா புறமும் பறந்ததது. அதிரடியாக விளையாடிய ஆந்த்ரே ரஸ்செல் 13 பந்துகளில் 1 பவுண்ட்ரி மற்றும் 7 சிக்ஸர்கள்  48 ரன்கள் விளாசினார்.  மேலும் கிறிஸ் லின் 43 ரன்கள், நிதீஷ் ராணா 37 ரன்கள்,  உத்தப்பா 33 ரன்கள் எடுத்தனர்.

ரஸ்செல்லின் அதிரடி காரணமாக நேற்றைய ஆட்டமே மாறியது.  5 பந்துகள் மீதம் உள்ள நிலையில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது. ரஸ்செல் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

19.1 ஓவரில் 5 விக்கெட்களை மட்டும் இழந்து (206 ரன்கள்) இலக்கை எட்டியது. இதன்மூலம் கொல்கத்தா அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிப்பெற்றது. பெங்களூர் அணியில் சைனி மற்றும்  நெகி தலா 2 விக்கெட்கள் வீழ்த்தினர்.