டெல்லி: ஏடிஎம் இயந்திரத்தில் பணம் இல்லைன்னா, இந்த ஏடிஎம் இயந்திரத்தை நிர்வகித்து வரும் வங்கிகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி அதிரடியாக அறிவித்து உள்ளது.

மாதத்தின் முதல்வாரத்தில் பெரும்பலான ஏடிஎம் இயந்திரங்களில், வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க முடியாத நிலையே உள்ளது. வங்கிகளைக் கேட்டால், ஏடிஎம் இயந்திரத்தில் எடுத்துக்கொள்ளுங்கள் என்று கூறி விடுகின்றனர். ஆனால், பல ஏடிஎம் இயந்திரங்களில் போதுமான அளவுக்கு பணம் வைக்கப்படுவதில்லை. இதனால் அவசர தேவைக்கு  வாடிக்கையாளர்கள் பணம் எடுப்பதில் கடுமையான சிரமங்களுக்கு ஆளாகின்றனர். சில ஏடிஎம் இயந்திரங்களில் நாட்கள் கணக்கில் பணம் இல்லாத சூழலும் எழுகிறது. இது தொடர்பாக ஏராளமான புகார்கள் அளிக்கப்பட்டு உள்ளன.

இந்த நிலையில், ஏடிஎம்களில்  பணம் இல்லை என்றால், அந்த ஏடிஎம்மை நிர்வகிக்கும் வங்கிகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என இந்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பு அறிவித்து உள்ளது.

இந்தி புதிய நடைமுறை  அக்டோபர் 1, 2021 முதல் அமலுக்கு வருவதாக தெரிவித்துள்ள ரிசர்வ் வங்கி,  தொடர்ச்சியாக 10 மணிநேரம் பணமில்லாமல் இருந்தால், அந்த ஏடிஎம்க்கு சொந்த  வங்கிகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

அபராதத் தொகையைப் பொறுத்தவரை, “ஒரு மாதத்தில் பத்து மணி நேரத்திற்கு மேல் ஏடிஎம்வ்ல பணம் இல்லை என்றால் அந்த வங்கிக்கு ரூ. 10,000 அபராதம் விதிக்கப்படும் என்று கூறியது. வங்கி, அதன் விருப்பப்படி, WLA ஆபரேட்டரிடமிருந்து அபராதத்தை திரும்பப் பெறலாம்.

ஜூன் 2021 இறுதி நிலவரப்படி, நாடு முழுவதும்  பல்வேறு வங்கிகளின் 2,13,766 ஏடிஎம்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.