டில்லி:

ந்திய ரிசர்வ் வங்கி புதிய ரூ.20 தாளை வெளியிடுவதாக அறிவித்து உள்ளது. இந்த நோட்டானது, மங்களகரமான வெளிர் மஞ்சள் நிறத்தில் காணப்படுகிறது.

பிரதமர் மோடி ஆட்சி பதவி ஏற்றதும் பணமதிப்பிழப்பை கொண்டு வந்தார். அப்போது ரூ.500 மற்றும் ஆயிரம் நோட்டுக்கள் தடை செய்யப்பட்டது.

அதைத்தொடர்ந்து மூதன் முறையாக ரூ.2000 நோட்டுக்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நோட்டு, பிங்க் கலரின் கண்ணை கவரும் வகையில் வெளியானது. அதைத் தொடர்ந்து வேறு வண்ணத்தில் புதிய ரூ.500 நோட்டும், பின்னர் வெளிர் நீலக்கலரில் ரூ.100 நோட்டும், தொடர்ந்து 10 ரூபாய் உள்பட பல புதிய ரூபாய் நோட்டுக்கள் வெளியானது.

இந்த நிலையில், தற்போது புதிய 20 ரூபாய் நோட்டை ரிசர்வ் வங்கி வெளியிட உள்ளது. இந்த நோட்டின் கலாராத  பச்சையும், மஞ்சளும் கலந்து வெளிர் மஞ்சள் நிறத்தில் காணப்படுகிறது.

நோட்டின்  ஒரு பக்கம் மகாத்மா காந்தி படமும் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திசாந்ததாஸ் கையெழுத்தும் இடம் பெற்றுள்ளது. மறு பக்கம் நாட்டின் பாரம்பரியத்தை விளக்கும் வகையில் எல்லோரா குகை ஓவியம் இடம் பெற்றுள்ளது.

மேலும் எல்லா ரூபாய் நோட்டுக்களும் இருப்பது போல் தமிழ் உள்பட 15 மொழிகளில் 20 ரூபாய் என்று அச்சிடப்பட்டுள்ளது.

இந்த புதிய 20 ரூபாய் நோட்டுக்கள் விரைவில் புழக்கத்துக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது. புதிய நோட்டுக்கள் வெளியிட்டாலும் பழைய நோட்டுகளும் புழக்கத்தில் இருக்கும் என்றும் இந்திய ரிசர்வ் வங்கி  தெரிவித்துள்ளது.