டில்லி
வங்கிகளில் அடிப்படை சேமிப்பு வங்கி கணக்குகள் வைத்திருப்போரு மாதத்துக்கு ஏடிஎம் உள்ளிட்ட 4 முறை மட்டுமே பணம் எடுக்க முடியும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
அடிப்படை சேமிப்பு வங்கி கணக்கு என்பது பொருளாதாரத்தில் நலிவுற்றோருக்காக அறிவிக்கப்பட்ட வங்கிக் கணக்குகள் ஆகும். இந்த கணக்குகளில் குறைந்த பட்ச வசதிகள் மட்டும் அளிக்கப்படும். அத்துடன் எவ்வித கட்டணமும் வசூலிக்கப்பட மாட்டாது. இந்த கணக்கை தொடங்க பணம் ஏதும் செலுத்த தேவை இல்லை. அத்துடன் கணக்கில் பணம் இல்லாமல் போனாலும் அபராதம் கிடையது.
இந்த கணக்கு வைத்துள்ளவர்களுக்கு வேறு வங்கியிலும் அல்லது அதே வங்கியிலும் வேறு ஏதும் கணக்கு வைத்துக் கொள்ள உரிமை கிடையாது. அப்படி கணக்கு தொடங்க விரும்பினால் இந்த கணக்கை முடித்து விட வேண்டும். அத்துடன் இந்த கணக்கு தொடங்கும் போதே வேறு வங்கிகளில் எவ்வித கணக்கும் கிடையாது என்பதை உறுதி படுத்த வேண்டும்.
ரிசர்வ் வங்கி நேற்று இந்த அடிப்படை சேமிப்பு வங்கி கணக்கு குறித்து அனைத்து வங்கிகளுக்கும் ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில், “இந்த அடிப்படை சேமிப்பு கணக்கு வைத்திருப்போர் தங்கள் கணக்குகளில் எத்தனை முறை வேண்டுமானாலும் பணம் செலுத்தா அநுமதி உண்டு. ஆனால் ஒரு மாதத்துக்கு 4 முறை மட்டுமே பணம் எடுக்க வேண்டும். இதில் ஏ டி எம் மூலம் பணம் எடுப்பதும் சேர்ந்ததாகும்.” என தெரிவித்துள்ளது.