டெல்லி
இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸின் பதவிக்காலம் மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 12 ஆம் தேதி முதல் இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக உள்ள சக்திகாந்த தாஸ். ஓய்வுபெற்ற தமிழக பிரிவு ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆவார் அவருடைய பதவிக்காலம் 3 ஆண்டுகள் என்று அறிவிக்கப்பட்டது.
அவரது பதவிக் காலம் கொரோனா பரவல் உச்சத்தில் இருந்தபோது பதவிக்காலம் மேலும் நீட்டிக்கப்பட்டது.. அந்த பதவிக்காலம் அடுத்த மாதத்துடன் நிறைவடைய உள்ள நிலையில், அவருக்கு மீண்டும் ஒரு முறை அதாவது 2-வது தடவையாக பதவி நீட்டிப்பு வழங்கப்பட உள்ளது.
ஆயினும் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய அரசு இன்னும் வெளியிடவில்லை. தற்போது ஜார்கண்ட் மற்றும் மகாராஷ்டிராவில் தேர்தல் நடைபெற உள்ளதால் தேர்தலுக்கு பின்னர் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
[youtube-feed feed=1]