10 ரூபாய் கள்ள நாணயம் புழக்கத்தில் விடப்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள வதந்திகளை நம்பவேண்டாம் என்றும் உங்கள் கையில் இருக்கும் 10 ரூபாய் நாணயம் நல்லதுதான். எனவே அதை பயன்படுத்த தயங்க வேண்டாம் என்று ரிசர்வங்கி கேட்டுக் கொண்டுள்ளது.
இது குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், “சிலர் எதையாவது அரைகுறையாக தெரிந்து கொண்டு தேவையற்ற வதந்திகளை கிளப்பி அனைவரையும் குழப்பத்துக்குள்ளாக்குகின்றனர். இதனால் சாமானிய மக்களும், வியாபாரிகளும் வெகுவாக பதிக்கப்படுகிறார்கள். 10 ரூபாய் கள்ள நாணயம் எதுவும் புழக்கத்தில் இல்லை. உங்கள் கையில் இருப்பது நல்ல நாணயம்தான். எனவே அதை தயங்காமல் பயன்படுத்துங்கள் என்று கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும், எல்லா 10 ரூபாய் நாணயங்களும் ஒரே மாதிரியாக இருக்காது. உதாரணத்துக்கு சில நாணயங்களில் ரூபாய் அடையாளம் இருக்கும், சிலவற்றில் இருக்காது. ஆனால் எல்லாமே செல்லுபடியாகும் நாணயங்கள்தான். அவை வெவ்வேறு சமயங்களில் தயாரிக்கப்பட்டவை எனவே டிசைனில் வேறுபாடுகள் இருக்கலாம் அவ்வளவுதான்! எனவே தேவையற்ற குழப்பங்களை தவிருங்கள் என்றும் அந்த அறிக்கையில் ரிசர்வ் வங்கி மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.