2000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து நீக்கி ஆர்.பி.ஐ. இன்று அறிவித்துள்ளது.
2016 ம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின் புதிதாக 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டது.
இந்த நோட்டுக்களை அச்சடிக்கும் பணி 2018 -19 நிதியாண்டிலேயே நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் 2000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து நீக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளதை அடுத்து இதுகுறித்து ஆர்.பி.ஐ. இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
2000 ரூபாய் கையிருப்பு வைத்திருப்போர் வங்கிகளில் அதனைக் கொடுத்து மாற்றிக்கொள்ள செப்டம்பர் 30 வரை அவகாசம் வழங்கியுள்ளது.
அதிகபட்சமாக 20,000 ரூபாய் வரை மட்டுமே 2000 ரூபாயை வேறு செல்லத்தக்க மதிப்பில் உள்ள பணமாக மாற்றிக்கொள்ள முடியும் என்று அறிவித்துள்ளது.