கூட்டுறவு கடன் சங்கங்களில் உள்ள வைப்புத் தொகைக்கு காப்பீடு வழங்க முடியாது என்று ஆர்.பி.ஐ. தெளிவுபடுத்தியிருக்கிறது.
கூட்டுறவு கடன் சங்கங்கள் ‘வங்கி’ என்ற வார்த்தையை தங்கள் பெயரிலோ மற்ற வர்த்தகத்திலோ பயன்படுத்தக் கூடாது என்று ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா உத்தரவிட்டிருக்கிறது.
2020ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வங்கிகள் ஒழுங்குமுறை சட்டத்தில் மேற்கொண்ட திருத்தத்தின் அடிப்படையில் வங்கி, வங்கியாளர் போன்ற வார்த்தைகளை கூட்டுறவு சங்கங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இச்சங்கங்களில் உறுப்பினராக இல்லாதவர்களிடம் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளக்கூடாது என்றும் தெரிவித்துள்ள ஆர்.பி.ஐ., கூட்டுறவு சங்கங்களில் வைக்கப்படும் பணத்திற்கு காப்பீடோ இழப்பீடோ வழங்க முடியாது என்று தெளிவுபடுத்தியுள்ளது.
வங்கி என்று அடையாளப்படுத்திக் கொள்ளும் கூட்டுறவு சங்கங்களின் வங்கி உரிமம் தொடர்பாக ஆர்.பி.ஐ.யிடம் வாடிக்கையாளர்கள் தெளிவுபடுத்திக் கொள்ளவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.