டில்லி
ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி 0.25% குறைத்து உள்ளது.

அனைத்து வங்கிகளும் ரிசர்வ் வஞ்கியில் இருந்து கடன் வாங்குவது வழக்கமான ஒன்றாகும். இதில் குறுகிய மற்றும் நீண்ட கால கடன் இரண்டுமே அடங்கும். இதற்காக ரிசர்வ் வங்கி கடனுக்கேற்ப விகிதங்களில் வட்டியை வங்கிகளிடம் இருந்து பெறுகின்றன. இதற்கான அடிப்படை விகிதம் தற்போது 6.0 ஆக இருக்கிறது. இது ரெபோ வட்டி விகிதம் எனப்படும்.
இந்நிலையில் ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 0.25% குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது. இதனால் இனி அடிப்படை வட்டி விகிதம் 5.75% ஆக இருக்கும். இந்த முடிவு ரிசர்வ் வங்கியின் பணவியல் கொள்கை குழுவின் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதன் மூலம் வங்கிகள் வழங்கி உள்ள கடன்களின் வட்டிகளும் குறைய வாய்ப்புள்ளது. இதில் வீட்டுக்கடன், தனி நபர் கடன் உள்ளிட்ட பல கடன்களும் அடங்கும்.
இந்த அறிவிப்புக்கு முன்னரே ஸ்டேட் வங்கி, எச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ,, பஞ்சாப் நேஷனல், கோடாக் மகிந்திரா, யூனியன் வங்கி மற்றும் பாங்க் ஆஃப் பரோடா உள்ளிட்ட பல வங்கிகள் வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளன.
[youtube-feed feed=1]