டெல்லி: கொரோனா வைரசானது ரூபாய் நோட்டுகள் மூலம் பரவும் என்று ரிசர்வ் வங்கி உறுதிப்படுத்தியதாக அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
ரூபாய் நோட்டுகள் மூலம் கொரோனா வைரஸ் பரவுமா இல்லையா என்ற குழப்பம் பலருக்கும் இருந்து வருகிறது. எனவே அதை தெளிவுபடுத்தக் கோரி 2020ம் ஆண்டு மார்ச் 9ம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு கடிதம் ஒன்றை எழுதியது.
பின்னர் இந்த கடிதமானது இந்திய ரிசர்வ் வங்கிக்கு அனுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ரிசர்வ் வங்கி, ரூபாய் நோட்டுகள் மூலம் கொரோனா வைரஸ் உள்ளிட்டவை பரவக்கூடும் என்று தெரிவித்துள்ளது.
ஆகையால், ரூபாய் நோட்டுகளின் பயன்பாட்டை தவிர்க்க டிஜிட்டல் பரிவர்த்தனைகளை அதிகமாகப் பயன்படுத்த வேண்டும் என்றும் கூறி உள்ளது. இந்த செய்தியை அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.