ரேமண்ட் அதிபர் தனது மகனுடன்

ந்தியாவின் மிகப் பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவராக விளங்கிய ரேமண்ட்ஸ் நிறுவனர் விஜய் சிங்கானியா. தனது முதுமை காரணமாக சொத்துக்களை மகனுக்கு எழுதி வைத்துவிட்டார்.

தற்போது,  மகனால் துரத்தப்பட்டதால் பண வசதியின்றி வாடகை வீட்டில் வசித்து வருகிறார். மகன்மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்தியாவில் ஆண்களுக்கான கோட் சூட் என்றாலே நினைவுக்கு வருவது ரேமண்ட்ஸ். ஆண்களின்  உடைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய  ‘ரேமண்ட்’ஸ் நிறுவன துணிகள்.

ரேமண்ட்ஸ் நிறுவனத்தில் மொத்தம் 16 உற்பத்தி ஆலைகள் உள்ளன. அதில் மட்டும் மொத்தம் 30,000 தொழி லாளர்கள் பணிபுரிகின்றனர். ஒவ்வொரு ஆலையிலும் கிட்டதட்ட 2000 தொழிலாளர்கள் பணியில் உள்ளனர்.

இந்த நிறுவனத்தை தொடங்கியவர்  விஜய்பத் சிங்கானியா.  தனது கடும் உழைப்பின் காரணமாக இந்தியாவில் உள்ள புகழ்பெற்ற பணக்காரர்களில் ஒருவராக விளங்கினார்.

விஜய் சிங்கானியா குடும்பத்திற்கு சொந்தமாக 1960-களில் 14 மாடி கட்டிடம் கட்டப்பட்டது. இந்தக்கட்டிடம் 2007ல் 36 மாடி கொண்டதாக உயர்த்தப்பட்டு மேம்பட்டது.

தற்போது தனது முதுமை மற்றும் ஓய்வைக் கருதி விஜய்சிங்கானியா வணிகப் பொறுப்புகளை மகன் கவுதமிடம் ஒப்படைத்திருந்தார். வீட்டையும் தனது குடும்பத்தினருக்கு எழுதி வைத்தார்.

குடும்பத்தினருடம் போடப்பட்ட ஒப்பந்தத்தில், ஒவ்வொருவருக்கும் சுமார் 5,185 சதுர அடி உடைய வீடு கொடுக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், இன்றுவரை வீடு கொடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதற்கு காரணம் தனது மகன்தான் என்று விஜய்பத் சிங்கானியா, மகனிடம் கேள்வி எழுப்பி உள்ளார். இதன் காரண மாக மகனால் வீட்டைவிட்டு துரத்தப்பட்ட விஜய்பத் சிங்கானியா தற்போது வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறார்.

இதையடுத்து, ரேமண்ட் நிறுவனத்தை தனது தனிப்பட்ட சொத்து போல தனது மகன்  நடத்துவதாக கூறி  விஜய் சிங்கானியா சார்பில் மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில்,  மலபார் ஹில்ஸ் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் தன்னை வசிக்க (விஜய்பத் சிங்கானி)  அனுமதிக்காமல் அவரது மகன் கவுதம் தாக்குவதாகவும்,  குடியிருப்பை தன்னிடம் ஒப்படைக்க  உத்தரவிடுமாறும் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு வரும்  ஆகஸ்ட் 22ந் தேதி விசாரணைக்கு வர இருக்கிறது.

பிரபலமான கோடீசுவரர் ஒருவர்  இன்று குடியிருப்பின்றி கோர்ட்டை நாடியிருப்பது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.