சென்னை:

திமுக மக்களவை குழுத் தலைவராக தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை ஒருங்கிணைப் பாளரும் அறிக்கை வெளியிட்டு உள்ளனர்.

நடைபெற்று முடிந்த லோக்சபா தேர்தலில் அதிமுக 20 தொகுதிகளில் போட்டியிட்டு தேனி தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்ற நிலையில் படுதோல்வியை சந்தித்தது. தற்போது தேனி தொகுதி பாராளுமன்ற வேட்பாளரான ஓ.பி.எஸ்.சின் மகன் ரவீந்திரநாத் மட்டுமே பாராளுமன்ற மக்களவைக்கு சென்றுள்ள நிலையில், மக்களவை தலைவராக அவரை நியமித்து அதிமுக தலைமை அறிவித்து உள்ளது. ரவீந்திரநாத் குமார் நியமனம் தொடர்பாக, மக்களவை சபாநாயகருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூட்டாக அறிவித்து உள்ளனர்.

ஒரே ஒரு உறுப்பினர் மட்டுமே உள்ள நிலையில், அவர்தான் தலைவர், அவர்தான் உறுப்பினர் என அனைத்துக்கும் அவர்தான் செயல்பட வேண்டிய நிலையில், அவரை பாராளுமன்ற மக்களவை தலைவராக நியமித்து அதிமுக தலைமை அறிவித்து உள்ளது சமூக வலைதளங்களில் நக்கலடிக்கப்பட்டு வருகிறது.

ஆளே இல்லாத டீக்கடையில் யாருக்குப்பா டீ ஆத்துறிங்க என்ற தமிழ்ப்பட காமெடியை கோடிட்டு, ஒரே உறுப்பினரை கொண்ட அதிமுகவுக்கு தலைவர் என தனியாக அவரை நியமிக்க வேண்டுமா என விமர்சிக்கப்பட்டு வருகிறது.