அகமதாபாத்:
சென்னை சூப்பர் கிங்ஸ் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடோஜாவின் தந்தையும், சகோதரியும் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.

ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா கடந்த மார்ச் 3-ம் தேதி பாஜகவில் சேர்ந்தார்.
இந்நிலையில், ஜடேஜாவின் தந்தை அனிருத்சின்ஹ, சகோதரி நைனாபா ஆகியோர் ஹர்திக் பட்டேல் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தனர்.
ஜாம்நகர் மாவட்டம் கலவாட் என்ற இடத்தில் நடந்த காங்கிரஸ் பேரணியில் அவர்கள் இருவரும் இணைந்தனர்.
ஜடேஜாவின் சொந்த ஊர் ஜாம்நகர் என்பது குறிப்பிடத்தக்கது.
Patrikai.com official YouTube Channel