நெட்டிசன்:
சமூக ஆர்வலரும் எழுத்தாளரும், வி.சி.க.  பொதுச்செயலாளர் ரவிக்குமார், அவர்கள்  தனது முகநூல் பக்கத்தில் “காவிரி” என்ற தலைப்பில் எழுதியுள்ள கவிதை:
untitled-2

மலையில் உற்பவித்து
நதியாய் ஊர்ந்து
சமவெளியில் பாய்ந்து
அணைகளைக் கடந்து வாய்க்கால் வழியோடி வயல்களில் பசுமைபரப்பிய

அது

இப்போது சொட்டுகிறது தூக்கிட்டுக்கொண்டவனின் உயிர்த்தலத்திலிருந்து,
இப்போது வழிகிறது
அலறிப் பரிதவிக்கும்
பெண்டு பிள்ளைகளின் கண்களிலிருந்து

அதை

ரத்தம் என்கிறார்கள் சிலர்
அதைக் கண்ணீர் என்கிறார்கள் சிலர்
அதைத் தண்ணீர் என்கிறார்கள் சிலர்
எதுவுமே இல்லை
அது அரசியல் என்கிறார்கள் சிலர்

ரவிக்குமார்
ரவிக்குமார்