நாடு முழுவதும் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. தலைநகர் டெல்லியிலும் தொற்று பரவல் கணிசமாக உயர்ந்துள்ளது. இந்த நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அதிகாரிகளுடன் இணைந்து நடவடிக்கை எடுத்து வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் கொரோனா சோதனை நடத்தப்பட்டது.
இதில், அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
இதுகுறித்து அவர், தனது டிவிட்டர் பதிவில், தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டாலும் உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், அமித்ஷாவுடன் தொடர்பில் இருந்து, மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டார் என அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.
கடந்த சனிக்கிழமை உள்துறை மந்திரி அமித்ஷாவை மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் சந்தித்த நிலையில், அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், ரவிசங்கர் பிரசாத்தும் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.