விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாக இருந்த படம் கொரோனா அச்சுறுத்தலால் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது .
இந்த படத்தில் விஜய்க்கு நாயகியாக மாளவிகா மோகனன் நடித்திருக்கிறார் . மாளவிகா மோகனனுக்கு இது இரண்டாவது தமிழ் படம். இதற்கு முன்பு ரஜினியின் பேட்ட படத்தில் சசிகுமார் ஜோடியாக நடித்திருந்தார் அவர்.
மாஸ்டரில் மளவிகாவுக்கு பிரபல நடிகை ஒருவர் தான் டப்பிங் பேசி உள்ளார். ஒரு கிடாயின் கருணை மனு படத்தில் ஹீரோயினாக நடித்திருந்த ரவீனா ரவி தான் மளவிகாவுக்காக மாஸ்டரில் டப்பிங் பேசியுள்ளார்.
அவர் நடிக்க வரும் முன்பே பல முன்னணி ஹீரோயின்களுக்காக டப்பிங் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது அம்மா ஸ்ரீஜா ரவியும் ஒரு முன்னணி டப்பிங் ஆர்ட்டிஸ்ட் என்பது குறிப்பிடத்தக்கது.