தராபாத்

ருத்துவமனையின் பிணவறையில் வைக்கப்படிருந்த இளம்பெண்ணின் சடலத்தின் முகத்தை எலிகள் கடித்துக் குதறி உள்ளது.

ஐதராபாத் நகரின் அபீப் நகர் பகுதியில் வசித்து வத 21 வயதான இளம்பெண் கடந்த திங்கள் அன்று தூக்குப் போட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.   குடும்பப் பிரச்னை காரணமாக அவர் தற்கொலை செய்துக்கொண்டதாக கூறப்படுகிறது.   அப்சல்கஞ்ச் காவல் நிலைய போலீசார் அவரது உடலை ஓஸ்மானியா பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

பிரேத பரிசோதனை முடிந்து அந்த பெண்ணின் சடலம் பிணவறையில் வைக்கப்பட்டது.  நேற்று அந்தப் பெண்ணின் உடலை பார்க்க அவளது உறவினர் மருத்துவமனைக்கு சென்றுள்ளனர்.    அப்போது அந்த சடலத்தின் முகம் எலிகளால் கடிக்கப்பட்டு சிதைந்திருந்தது.   அதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் உடனடியாக மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் அளித்தனர்.

மருத்துவமனை அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.   மருத்துவமனை இயக்குனர் ரமேஷ் ரெட்டி இது குறித்து, “இந்த சம்பவம் அதிர்ச்சிக்குறியது.  இது குறித்து பிணவறை பொறுப்பாளர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.    நவீன வசதிகள் உள்ள இந்த மருத்துவமனையில் எவ்வாறு எலிகள் வந்து முகத்தை சிதைத்தது என்பது குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.” எனக் கூறி உள்ளார்.