சென்னை:
சென்னையின் அனைத்து தொகுதிகளிலும் உள்ள குடும்ப அட்டையில் (ரேஷன் கார்டு) மாற்றங்கள் செய்தல் தொடர்பாக தமிழ்நாடு உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் 17 மண்டல பகுதிகளில் குறைதீர் கூட்ட முகாம் இன்று காலை 10 மணி முதல் நடைபெற உள்ளது.
Ration-Card-1
குடும்ப அட்டைகளில் பெயர், முகவரி மாற்றம், திருத்தம் மற்றும் ரேஷன் கடைகளின் செயல்பாடுகள், நுகர்வோர்கள் ஏமாற்றப்படுவது போன்ற குறைகள் ஏதேனும் இருப்பின் அவற்றை இந்த கூட்டத்தில் தெரிவிக்கலாம். குறைகளை விரைந்து தீர்வு காண உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

சென்னையில் முகாம் நடைபெறும் இடங்கள்:

* மண்ணடி, தம்பு செட்டி தெரு, முத்தியால்பேட்டை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி. (காளிகாம்பாள் கோவில் அருகில்)
* ராயபுரம்– பழைய வண்ணாரப்பேட்டை, வேலாயுத பாண்டியன் தெரு, தனலட்சுமி தொடக்கப்பள்ளி.
* பெரம்பூர்– பார்த்தசாரதி தெரு, செய்யூர், சென்னை நடுநிலைப்பள்ளி.(பெரம்பூர் பஸ்நிலையம் அருகில்)
* அண்ணாநகர்– செனாய்நகர், சுப்புராயன் தெரு, சென்னை மேல்நிலைப்பள்ளி. (மாங்காளி அம்மன் கோவில் அருகில்)
* அம்பத்தூர்– முகப்பேர் கிழக்கு, நக்கீரன் சாலை, வில்லிவாக்கம் பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளி. (ஜே.ஜே.நகர் போலீஸ்நிலையம் பின்புறம்)
* வில்லிவாக்கம்– கொளத்தூர், ஸ்கூல் ரோடு, சென்னை மேல்நிலைப்பள்ளி.(ரெட்டேரி சந்திப்பு அருகில்)
* திருவொற்றியூர்– மணலி, சின்ன சேக்காடு, தேவராஜன் தெரு, சென்னை நடுநிலைப்பள்ளி.
* ஆவடி– வெள்ளானூர், அரிக்கம்பேடு, அரசினர் மேல்நிலைப்பள்ளி. (வேல்டேக் கல்லூரி அருகில்)
ஆர்.கே.நகர், மயிலாப்பூர், தாம்பரம்
* ஆர்.கே.நகர்– எம்.பி.டி. காலனி சென்னை உயர்நிலைப்பள்ளி. (எம்.பி.டி. காலனி மசூதி அருகில்)
* தியாகராயர்நகர்– வடபழனி, நெற்குன்றம் பாதை, வள்ளி திருமண மண்டபம். (வடபழனி கோவில் பின்புறம்)
* மயிலாப்பூர்– தரமணி, பீலி அம்மன் கோவில் தெரு, சென்னை மேல்நிலைப்பள்ளி. ( தரமணி பஸ்நிலையம் அருகில்)
* பரங்கிமலை– பட்ரோடு, கண்டோன்மென்ட் மேல்
நிலைப்பள்ளி (ஜெயந்தி தியேட்டர் எதிரில்)
* தாம்பரம்– பொழிச்சலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம்.
* சைதாப்பேட்டை– கிண்டி மடுவங்கரை சென்னை மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி.
* ஆயிரம் விளக்கு– மாடல் பள்ளி சாலை, சென்னை உயர்நிலைப்பள்ளி (அப்பல்லோ குழந்தைகள் நல மருத்துவமனை அருகில்)
* சேப்பாக்கம்– அருணாசலம் தெரு, சென்னை மாநகராட்சி சமுதாயக் கல்லூரி வளாகம்.
* சோழிங்கநல்லூர்– ஒக்கியம் துரைப்பாக்கம், 195–வது வார்டு கவுன்சிலர் அலுவலகம். ( கண்ணகி நகர் காவல்நிலையம் அருகில்)

     பொது விநியோக திட்டத்தில் காணப்படும் குறைபாடுகள் குறித்து பொதுமக்கள் தங்களது குறைகளை முகாமில் தெரிவித்து சரி செய்து கொள்ளலாம்.  தமிழகம் முழுவதும் வட்டங்கள் தோறும் மக்கள் குறைதீர் கூட்ட முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது.