மேஷம்

பிரதர்ஸ் சிஸ்டர்ஸ் வழியில் இருந்து வந்த கருத்து வேற்றுமை தீரும். உத்தியோகஸ்தர்கள், தங்கள் பணியில் கவனமாக நடக்காவிட்டால், சிறு சிரமங்கள் நேரலாம்.  தொழிலில் வேலைப்பளு அதிகரித்தாலும் லாபமும் கூடும். குடும்பத்தினரிடையே இணக்கமான சூழ்நிலை நிலவும். ஆன்மிகப் பயணம் மேற்கொள்ள திட்டமிடுவீங்க. உங்க வாழ்க்கைத்துணை மூலமும், நண்பர்கள் மூலமும், குருமார்கள் மூலமும் ஆலோசனை உதவிகள் கிடைக்கும். அதன் மூலம் நீங்க பயன் பெறுவீங்க. சுபகாரியங்கள் நிச்சயமாகும், எதிர்பார்த்தபடி பிரதர்ஸ் சிஸ்டர்ஸ் வழியில் ஆதரவு கிடைக்கும். தொழிலில் வளர்ச்சி நிலை தெரியும். தயக்கங்கள் குறையும். அரசாங்க உதவிகள் அனுகூலமாகும். வீடு, நிலம் வாங்குவதில் உள்ள தடைகள் இனி இருக்காது. உடல் நலனும் நன்றாக இருக்கும். மொத்தத்தில் ஹாப்பி வீக்தாங்க.

பெருமாளுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்யுங்கள்.

ரிஷபம்

எதிலும் சற்று நிதானமாகவும், எச்சரிக்கையாகவும் நடந்து கொள்ள வேண்டிய நேரம் இது. உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளிடம் சலுகையை எதிர்பார்க்க முடியாது. தொழில் செய்பவர்கள், ஓரளவே முன்னேற்றம் காண முடியும். குடும்பத்தில் சுமுகமான நிலை காணப்படும். பூர்வீகச் சொத்து பிரச்சினை அலைக்கழிக்கும். இந்த வாரம் நன்மை செய்யும் அமைப்பும் உண்டு. சில எதிர்பாராத நல்ல வாய்ப்புகள் மூலம் உங்க வாழ்வில் திருப்பங்கள் நிகழும். ஆனால் அதை கவனத்தோடு நீங்க கையாள வேண்டும். வார மத்தியில் தவிர மீதி நாட்களில் உங்க உடல்நிலை, மனநிலையை உற்சாகமாக இருக்கும். சிறு சிறு சம்பவங்கள் மூலம் மகிழ்ச்சி கிடைக்கும். நண்பர்களால் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். பழைய நண்பர்களின் சந்திப்பு உங்களுக்கு உதவியாக அமையும். டோன்ட் ஒர்ரி. நன்மைகள் தரும் வீக் தான் இது.

துர்க்கை அம்மனுக்கு தீபம் ஏற்றுங்கள்.

மிதுனம்

கெடுபலன்கள் குறைந்தும், நற்பலன்கள் அதிகமாகவும் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பாராத இடமாற்றம், பதவி உயர்வால் நன்மை அடைவர். தொழில் செய்பவர்கள், தங்கள் துறையில் திருப்தியான வருவாயைப் பெறுவர். குடும்பத்தில் செல்வச் செழிப்பு உண்டாகும். பெரிய மனிதர் ஒருவரின் சந்திப்பு நிகழும். பேச்சு, செயல் இரண்டிலும் கவனம் தேவை. பொறுப்புகள் தானே வந்து தோளில் விழும். தந்தை வழி ஆதரவு கிடைக்கும். சொத்துக்கள் வாங்கும் பாக்கியம் ஏற்படும். கவர்மென்ட் மூலம் ஆதாயம் ஏற்படும். பயன்படுத்திக் கொள்ளுங்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். செலவுகளை கட்டுப்படுத்திச் செய்தால் சேமிக்கலாம். எனவே திட்டமிடல் அவசியம். பாப்பாவுக்காகக் காத்திருந்தவர்களுக்கு அதற்கான நல்ல வாய்ப்பு கிடைக்கும். ஹெல்த் நன்றாக இருக்கும் என்பதால் மனதில் உற்சாகம் இருக்கும். சுபகாரியங்களில் ஏற்பாடு சுமுகமாகவே நடக்கும். எனவே சூப்பர் வாரம்தாங்க இது.

துர்க்கை அம்மனுக்கு தீபம் ஏற்றி வணங்குங்கள்.

கடகம்

பணப்புழக்கம் சுமாராக இருக்கும். உத்தியோகஸ்தர்கள் இடமாற்றம் , பதவி உயர்வு கிடைக்க சில காலம் பொறுமை காக்க வேண்டும். தொழில் செய்பவர்கள், தங்கள் துறையில் முன்னேற்றம் காண்பர். குடும்பத்தில் கணவன் – மனைவி இடையே ஒற்றுமை பலப்படும். சிலருக்குத் திடீரென திருமணம் நிச்சயமாகும். உங்க சிந்தனை கூர்மையாகும். புதிய முயற்சிகளில் உந்தித் தள்ளும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் நீங்க எதிர்பார்த்த சாதகமான முன்னேற்றம் கிடைக்கும். எடுத்த விஷயங்கள் நல்லபடியாக முடியும்.  வேலைத்திறனும், அதற்கேற்ற வருமானமும் கிடைக்கும். ஆனால், அலைச்சல்கள் அதிகமாக இருக்கும். உங்க எண்ணங்கள் செயல்வடிவம் பெறும். பணவரவுகள் தடையின்றிக் கிடைக்கும். கலைத்துறையினர் இழந்த வாய்ப்புகளைத் திரும்பப் பெறுவாங்க. ஆக மொத்தத்தில் குட் வாரம்.

தட்சிணாமூர்த்திக்கு வில்வ மாலை சாத்தி வழிபடுங்கள்.

சிம்மம்

மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டிய வாரம் இது. உத்தியோகஸ்தர்கள், தங்கள் அன்றாடப் பணிகளில் கவனம் செலுத்துங்கள். தொழில் செய்பவர்களுக்கு, வேலைப்பளு அதிகரிக்கும். வருமானமும் பெருகும். குடும்பத்தை பொறுத்தவரை கணவன் – மனைவி இடையே இனிமையான சூழல் நிலவும். அதிக செலவு வரும். கடன் வாங்கினால் அது வளரும். எனவே, முடிந்த அளவு இருப்பதை வைத்துக்கொண்டு சமாளிக்கப் பாருங்கள். தொழில்கள் சீராக நடக்கும். வருமானம் செலவுக்கேற்ற வகையில் கிடைத்து விடும். குடும்பத்தில் நிம்மதி நிலவும். சுப நிகழ்வுகள் உறுதியாகும். அலுவலகத்தில் சுமுகமான வேலை நடக்கும். நீங்க எதிர்பார்த்த இடமாற்றம் இவ்வாரம் கிடைக்கலாம். தொழில் உற்பத்தி அதிகரிக்கும். அரசியல் துறையினருக்கு எதிர்பார்த்த ஏற்றம் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காணலாம். பதவி உயர்வு கிடைக்கும். ஸோ.. நல்ல வாரம்தாங்க இது.

ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாத்தி வழிபடுங்கள்.

கன்னி

உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு, எதிர்பார்த்தபடியே இடமாற்றத்துக்கான உத்தரவு கிடைக்கும். தொழில் செய்பவர்கள், தங்கள் துறையின் முன்னேற்றத்திற்காக கடுமையாக உழைப்பாங்க. குடும்பத்தில் செலவு அதிகரிக்கும். சிலருக்கு, ஆன்மிகப் பெரியோரின் சந்திப்பால் மனத்தெளிவு உண்டாகும். எதிலும் கவனம் தேவை. ஆனாலும், உங்களுக்கு உற்சாகமாக எழுந்துவிடும் ஆற்றல் உண்டு. பணப்புழக்கம்… வருமானம் ஏதோ ஒரு விதத்தில் வந்துவிடும். வியாபாரிகளுக்கு வியாபாரம் நல்லபடி நடக்கும்.. பிள்ளைகளைப் புதிய பாதையில் வழி நடத்துவீங்க. பணியிடத்தில் உங்களை நம்பி சில பொறுப்புகளை ஒப்படைப்பாங்க. வீடு வாகனத்தை சீர் செய்வீங்க. வியாபாரம் சூடு பிடிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும். ஆக இது சாதிக்கும் வாரம்தாங்க.

சந்திராஷ்டமம் உள்ள நாட்களில் மட்டும் பேச்சிலும் செயலிலும் ரொம்பவே கேர்ஃபுலாய் இருந்துவிட்டால் இது மேலும் அருமையான வாரமாய் அமைந்துடுங்க.

சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்யுங்கள்.

சந்திராஷ்டமம்: ஆகஸ்ட் 26 முதல் ஆகஸ்ட் 29 வரை

துலாம்

உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எவ்விதமான தொல்லைகளும் இருக்காது. அலுவலக ரீதியிலான சலுகைகள் உடனடியாக கிடைக்கும். தொழில் செய்பவர்கள், வாடிக்கையாளர்களின் திருப்தியை கருதி செயல்படுங்கள். குடும்பத்தில் சுபச்செலவு ஏற்படும். சிலர் புது வீடு கட்டி குடியேற வாய்ப்புண்டு. தொழில் சிறக்கும். சில முக்கிய முடிவுகள் எடுப்பீங்க. உடன்பிறந்தவர்கள் பாசமழை பொழிவாங்க. பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீங்க. ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவாங்க. உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதிச்சுப் பேசுவாங்க. மொத்தத்தில் இது இனிமையான வாரம்தாங்க.  

சந்திராஷ்டமம் உள்ள நாட்களில் மட்டும் பேச்சிலும் செயலிலும் ரொம்பவே கேர்ஃபுலாய் இருந்துவிட்டால் இது மேலும் அருமையான வாரமாய் அமைந்துடுங்க.

பெருமாளுக்குத் துளசி மாலை சாத்தி வழிபாடு செய்யுங்கள்.

சந்திராஷ்டமம்: ஆகஸ்ட் 29 முதல் ஆகஸ்ட் 31 வரை

விருச்சிகம்

உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் வந்து சேரும். உயர் அதிகாரிகள் ஒத்துழைப்பு கிடைக்கும். சிலருக்கு கவுரவப் பொறுப்பு கிடைக்கலாம். மனதளவில் உற்சாகம் பிறக்கும். மனத்தளர்வு நீங்கும். தாயார் தந்தையார், இருவரின் ஆசிகளும் கிட்டும். அதனால் குடும்பத்தில் குதூகலம் பிறக்கும். வீடு, சொத்து முதலியவற்றை வாங்கும் யோகம் உண்டு. கணவன்-மனைவி உறவில் அன்யோன்யமும் சந்தோஷமும் அதிகரிக்கும். திடீர் லாபங்கள், எதிர்பாராத சில பணவரவுகள் உங்களை வியப்பில் ஆழ்த்தும். சிலருக்கு வேலை மாற்றம் ஏற்படலாம். திருமணம் முதலிய சுபகாரியங்கள் நடைபெறும். ஆகவே.. திஸ் இஸ் குட் வீக்.

சந்திராஷ்டமம் உள்ள நாட்களில் மட்டும் பேச்சிலும் செயலிலும் ரொம்பவே கேர்ஃபுலாய் இருந்துவிட்டால் இது மேலும் அருமையான வாரமாய் அமைந்துடுங்க.

ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாற்றி வழிபட்டு வாருங்கள்.

சந்திராஷ்டமம்: ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 3 வரை

தனுசு

உங்க பிரச்னை சமாளிக்கக் கூடியதாக இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு, சலுகைகள் கிடைப்பதில் தடை உருவாகிப் பிறகு நீங்கும். தொழில் செய்பவர்கள், தங்கள் துறையில் சீரான முன்னேற்றத்தை அடைவர். பூர்வீகச்  சொத்து பிரச்னை சிக்கல்கள் தீரும். கணவன் மனைவி உறவுகள் சுமுகமாக இருக்கும். தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீங்க. குடும்பத்தில் சுப நிகழ்ச்சி ஒன்று திடீரென முடிவாகும். எந்த முடிவெடுப்பதாக இருந்தாலும் நிதானம் தேவை. தொழில் வாய்ப்பில் முன்னேற்றம் இருக்கும். தடைகள் நீங்கும். வண்டி வாகன சேர்க்கை  உண்டு. வருமானத்தை அதிகம் எதிர்பார்க்கலாம். வாராக் கடன்கள் வசூலாகும். வார்த்தைகளில் கம்பீரமும் நம்பிக்கையும் எதிரொலிக்கும். கணவன் – மனைவி உறவுகள் சுமுகமாக இருக்கு. ஆக மொத்ததில் திஸ் இஸ் ஹாப்பி வீக்.

சனி பகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றுங்கள்.

மகரம்

பெரும்பாலும் நற்பலன்களே ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் நினைத்தபடி நன்மைகளை அடைவாங்க. உயர் அதிகாரிகளின் பூரண ஒத்துழைப்பு கிடைக்கும். தொழில் செய்பவர்கள், தங்கள் துறையில் முன்னேற்றம் காண்பாங்க. பெண்களின் மனக்குறை நீங்கும். வாரத் துவக்கத்தை விட வார இறுதியில் சில நன்மைகள் உண்டு. பணவரவு நன்றாக இருக்கும். ஹெல்த் சீராகும். சுபச் செய்தி ஒன்று வந்துசேரும். வேலை வளர்ந்துகொண்டே இருக்கும். ஒருவேலையை முடித்தால் அடுத்த வேலை தயாராக நிற்கும். கடின உழைப்பு கொடுக்க வேண்டிய நேரமிது. ஆனாலும், அதற்கான பலனை தருகின்ற நேரம் இது. எண்ணியது நடக்கும். எதையும் ஒரு கை பார்க்கலாம் என்ற உற்சாகம் பிறக்கும். சில எதிர்பாராத வரவுகய் வந்து சந்தோஷத்தில் திக்குமுக்காடச் செய்யும். கேர்ஃபுலாய் இருந்தால் இது சூப்பர் வாரம்.

முருகப்பெருமானுக்கு சிவப்பு மலர் சூட்டி வணங்குங்கள்.

கும்பம்

ஆரோக்கியத்தில் அதிக அக்கறை செலுத்த வேண்டிய காலம் இது. உத்தியோகஸ்தர் களுக்கு அலுவலக ரீதியில் மிகத் திருப்தியான நிலை ஏற்படும். தொழில் செய்பவர்கள், நல்ல முன்னேற்றம் காண்பாங்க. குடும்ப உறுப்பினர்களிடையே ஒற்றுமை ஓங்கும். பிள்ளைகளை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது நல்லது. இதுவரை உங்களைப்பற்றி இருந்த தப்பான எண்ணங்கள் மாறும். மதிப்பான எண்ணங்கள் கூடும். . தொழில் செய்பவர்கள், ஓரளவு வளர்ச்சியைக் காண்பாங்க. தாய் தந்தையர்கள் உங்க பேரில்  மகிழ்வாங்க. சகோதரர்கள் ஆதரவு  இருக்கும். வண்டி வாகனம் சொத்து விஷயங்களில் சாதகமான நிலை பிறக்கும். வீட்டுக்குத் தேவையான பொருட்கள் ஆபரணங்கள் வாங்குவீங்க. தொழில் வளர்ச்சிக்கான பிரயாணங்கள் மேற்கொள்வீங்க. இடமாற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு. கவனமாய் இருப்போருக்கு இது அற்புதமான வீக்.

முருகப்பெருமானுக்கு அர்ச்சனை செய்து வழிபடுங்கள்.

மீனம்

உத்தியோகஸ்தர்களுக்கு, எதிர்பார்த்த சலுகை கிடைக்காவிட்டாலும் அதற்கு இணையான நன்மைகள் கிடைக்கப்பெறும்வேலைக்கேற்ற வருமானம் உண்டு. குடும்பத்தில் மருத்துவச் செலவு கூடும். சுப நிகழ்ச்சி ஒன்றை நடத்த முயற்சிப்பீங்க. ஹெல்த் சிறக்கும். விருப்பங்கள் நிறைவேறும். ஆத்ம பலம் அதிகமிருப்பதால் எதையும் எதிர்கொள்ளும் திறன் கிடைக்கும். உத்தியோக உயர்வுகள் மூலம் எதிர்பார்த்த நன்மைகள் கிடைக்கும். முடிவெடுப்பதில் தெளிவு பிறக்கும். வாரத்தின் துவக்கத்தில் சில எதிர்பாராத காரிய வெற்றிகள் கிடைக்கும். தொழில் செய்பவர்கள், தங்கள் துறையில் பெரிய திட்டங்களை நிறைவேற்றி வெற்றி காண்பீங்க. குடும்பத்தில் தம்பதியரிடையே அன்பு அதிகரிக்கும். நன்மை தீமைகள் கலந்தே இருக்கும். செலவுகள் வந்தாலும் அதற்கேற்ற சமாளிக்கக்கூடிய வரவுகளும் இருக்கும். ஆகவே.. திஸ் இஸ் குட் வீக்.

சிவபெருமானுக்கு வில்வ மாலை சூட்டி வணங்குங்கள்.