மேஷம்

ஆதாயம் தரும் விஷயங்கள் ஓரளவுக்கு சாதகமாக இருக்கும். பணவரவு எதிர்பார்த்தபடியே இருந்தாலும் சிறு தாமதத்துக்குப் பிறகு கிடைக்கும். வாரக்கடைசியில் திடீர் மாற்றங்களை எதிர்பார்க்கலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் தேவையான உதவிகளும், சலுகைகளும் கிடைக்கும். அலுவலகப் பணிகள் எளிதாக முடியும். குடும்பத்தில் அமைதி நிலவும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப விசேஷங்கள் சின்ன சஸ்பென்ஸூக்குப் பிறகு உறுதியாகும். தாய்வழி உறவினர்களைச் சந்தித்துப் பேசி சந்தோஷப்படுவீங்க.  பணியிலிருக்கும் அழுத்தங்கள் காரணமாக மனிதர்களிடம் கடுமை காட்ட வேண்டாமே. எதிர்பார்த்துக் காத்திருந்த பதவி உயர்வு கைக்கு எட்ட வாய்ப்பு உள்ளது. பணத்தேவைகளை நிறைவு செய்யக் கடுமையாக உழைப்பீங்க. நீண்ட நாளாக எதிர்பார்த்திருந்த நல்ல செய்தி தகவல் ஒன்று இந்த வாரம் கிடைக்கும். வியாபாரம் மற்றும் தொழிலில் படிப்படியான சீரான வளர்ச்சி கிடைக்கும். எதற்குமே அவசரம் வேண்டாம். சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் ரொம்பவே கவனமா இருங்கப்பா.

சந்திராஷ்டமம் : செப்டம்பர் 12 முதல் செப்டம்பர் 14 வரை.

ரிஷபம்

பெண்கள் மூலம் உதவிகள் கிடைக்கப் பெறுவீங்க. சொத்து சம்பந்தமான பிரச்னைகளைப் பேசி தீர்ப்பதறக்கான சாத்தியம் தென்படும். பிரியமானவர்களின் தேவை ஒன்றை நிறைவேற்றித் தருவீங்க. வியாபாரத்தில் புதிய முயற்சிகளைக் கையாளுவீங்க. பெண்கள் தங்கள் எடுக்கின்ற முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். தேவையான உதவிகளும் ஆதரவும் கிடைக்கும். முயற்சித்த ஏதேனும் ஒரு விஷயம் சரியாக நடக்கவில்லையே என்ற ஆதங்கம் விரைவில் தீரும்.கவலை வேண்டாம். மற்றவர்களுக்கு உதவுவதற்காக அலுவலகப் பணியைப் பகிர்ந்து கொள்ள வேண்டி வரலாம். எதிர்பார்த்த பண உதவிகள் உள்ளிட்ட சில விஷயங்கள் தாமதமாகலாம். கவனமாகச் செய்யும் விஷயங்கள் நிச்சயமாகப் பிரச்னையின்றி முடியும். எந்த விஷயத்திலும் அதிக கவனம் தேவை. அலட்சியமாக இருக்க வேண்டாம். கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் ரொம்பவே கவனமா இருங்கப்பா.

சந்திராஷ்டமம் : செப்டம்பர் 14 முதல் செப்டம்பர் 16 வரை

மிதுனம்

நண்பர்களால் ஆதாயம் கிடைக்கப் பெறுவீங்க. குடும்பத்தின் நிதி நிலைமையில் சீரான வளர்ச்சி இருக்கும். அலுவலகத்தில் பணிகளை முடித்து உயர் அதிகாரிகளால் பாராட்டு கிடைக்கப்பெறுவீங்க. குடும்பத்திற்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கிக் குடும்பத்தினரை சந்தோஷப்படுத்துவீங்க. குடும்பத்தாருடன் நேரத்தைச் செலவிடுவீங்க. அலுவலகத்தில் யாருடைய பிரச்னைகளிலும் தலையிட வேண்டாம். அவசியமற்ற சந்திப்புகள் செய்யவேண்டாம். கடன் தொடர்பான பிரச்னைகளில் சமாதானமாகவும் சற்றுப் பணிவாகவும் செல்ல வேண்டும். இதுவரை தாமதப்பட்டுக் கொண்டிருந்த விஷயங்கள் அனைத்தும் இனி எளிதாக முடியும். குடும்பப் பிரச்னைகள் நிம்மதி தரும் வகையில் முடிவுக்கு வரும். தாயார் மற்றும் தந்தையின் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சொத்து சம்பந்தமான பிரச்னைகளில் மாற்றமில்லை.

கடகம்

அலுவலகப் பணிகள் அதிக மாற்றமின்றி இருக்கும். வேறு நிறுவனங்களுக்கு மாறும் முயற்சியை இப்போது முயற்சியை மேற்கொண்டால் வெகு விரைவில் அது கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறி சுறுசுறுப்புக்கு மாறும். கடன் கொடுத்திருந்தவர்களுக்கு, பாக்கிகள் வசூலாகும். கட்டுமான நிறுவனங்கள், மருத்துவ சேவை சார்ந்த தொழில் போன்றவர்களுக்கு சிறப்பான வளர்ச்சி உண்டாகும். வாழ்வில் முன்னேறுவதற்கான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பெண்களுக்குச் சொத்து சம்பந்தமான பிரச்னைகள் முடிவுக்கு வரும். எதிர்காலம் பற்றிய கவலை தீரும் அளவுக்கு நன்மைகள் நடைபெறும் வாரமாக இருக்கும். மாணவர்கள் கல்வியில் ஆர்வம் காட்டுவாங்க. அவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் தேடி வரும். நல்ல வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

சிம்மம்

நண்பர்களால் அரசாங்கம் சம்பந்தப்பட்ட உதவிகள் கிடைக்கும். எதிர்பார்த்த நன்மைகள் அலுவலகத்தில் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும். குடும்பத்திருடன் இருந்து வந்த மனத்தாபங்களும் சச்சரவுகளும் நீங்கும். பெண்களுக்கு சகோதர சகோதரிகளால் உதவிகள் கிடைக்கும்.  மன சஞ்சலத்திற்கு இடம் கொடுக்காதீர்கள். ஆரோக்கியம் பற்றிய கவலை தோன்றி மறையும். குழந்தைகளின் எதிர்காலம் கருதி ஒரு சில நல்ல முடிவுகளை எடுப்பீங்க.தொழில் மற்றும் வியாபாரத்தில் சற்று நிதானமாக இருக்க வேண்டும்.  எதிர்பார்த்த உதவிகள் மட்டுமல்லாமல் எதிர்பாராத உதவிகளும் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியும் லாபமும் கிடைக்கப் பெறுவீங்க. குடும்பத்தினர் மகிழ்ச்சிகரமாக இருப்பார்கள். குடும்பத்தில் உள்ள இளம் வயதினரின் தேவைகள் நிறைவேறும். வேலை தொடர்பான நல்ல தகவல் கிடைக்கும்.

கன்னி

தேவையில்லாமல் சர்ச்சைகளில் ஈடுபடாதீர்கள். அக்கம்பக்கத்தினருடன் அனுசரித்துச் செல்லுங்கள். செலவுகளை கட்டுப்படுத்த முடியாமல் தவிக்காதபடி, முடிந்தவரை சிக்கனமாக இருங்கள். அநாவசிய செலவுகளை தவிர்த்து விடுங்கள். தந்தை அல்லது தாயாரின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். மருத்துவச் செலவுகள் குறையும். கடன் தொடர்பான பிரச்னைகள் மெல்லக் குறையும். சொத்து சம்பந்தமான விஷயங்கள் இயல்பாக முடிவுக்கு வரும். தாயாரின் உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் ஓரளவுக்கு வருமானம் கிடைக்கும். மனக் குழப்பங்களில் இருந்து வெளி வருவதற்கான முயற்சிகளில் இறங்குவீங்க. நல்லவர்களின் உதவியும் ஆலோசனையும் கடைசி நேரத்தில் கிடைத்து நிம்மதிப்பெருமூச்சு வரும். பார்ட்னருடன் வியாபாரம் செய்து கொண்டிருப்பவர்களுக்கு எதிர்பாராத வாய்ப்பு ஒன்று முடிவாகும். அதன் மூலம் ஆதாயம் கிடைக்கும்.

துலாம்

நீண்ட நாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த நல்ல தகவல் கிடைக்கும். திருமண முயற்சிகள் சாதகமாக இருக்கும். அலுவலகப் பணிகளில் சிறப்பான முன்னேற்றம் ஏற்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் இருமடங்காக இருக்கும். எதிர்பார்த்த பணவரவு எதிர்பார்த்தபடியே கிடைக்கும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். புதிய தொழில் அல்லது வியாபார முயற்சிகளில் ஈடுபடுவதற்கான அத்தனை வாய்ப்புகளும் கிடைக்கும். உங்களுக்கு சம்பந்தம் இல்லாத விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. குடும்பத்தினரிடம் அனுசரித்துச் செல்லுங்கள். அலுவலகப் பணிகளில் அதிக கவனம் வேண்டும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நிதானமாக இருக்க வேண்டும். எதை முயன்றாலும் அது உங்களின் உழைப்பு மற்றும் முயற்சி காரணமாக வெற்றிகரமாக முடியும். ஜாலியான மன நிலை ஏற்பட்டு மகிழ்ச்சியான சூழல் நிலவும்.

விருச்சிகம்

எதிர்பாராத சந்திப்பு ஒன்று நிகழும். நீண்ட நாளாக வராமலிருந்த பாக்கிகள் வசூலாகும். வியாபார பேச்சுவார்த்தைகள் திருப்திகரமாக இருக்கும். எதிர்பார்த்த பண உதவி இன்று கிடைக்கும். சொத்து சம்பந்தமான பிரச்னைகளை இன்று பேசித் தீர்ப்பதற்கு வழி கிடைக்கும்.  பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் முடிவுக்கு வரும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். மனதுக்கு  நெருக்கமான சிலருடன் ஏற்பட்டு இருந்த மனக்கசப்புகள் நீங்கி மீண்டும் ஒற்றுமை ஏற்படும். தொழிலில் கணிசமான முன்னேற்றம் எதிர்பார்க்கலாம். டாக்டர், வக்கீல் போன்றவர்களின் தொழிலில் நல்ல வளர்ச்சியும் லாபமும் கிடைக்கப் பெறுவீங்க. வியாபாரத்தை விரிவாக்கம் செய்வதற்குத் தேவையான உதவிகள் கிடைக்கும். அநாவசியத்துக்கு யாரிடமும் போய்ப் பேசி வம்பில் மாட்டிக்கொள்ள வேண்டாம்.

தனுசு

பெண்கள் தங்கள் விருப்பங்கள் நிறைவேறுவதில் மகிழ்ச்சி அடைவாங்க. திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் நிச்சயமாகும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றத்தைக் காண்பார்கள். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகளும், சந்தர்ப்பங்களும் கூடி வரும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும். பாகப்பிரிவினைகள் ஒழுங்காகும். சகோதரர்களிடம் ஏற்பட்டு இருந்த மனவருத்தங்கள் நீங்கும். பலரும் உங்கள் உதவியை எதிர்பார்ப்பார்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் வரவும், வரவுக்கு ஏற்ற செலவும் இருக்கும். குறிப்பிடத்தக்க அளவுக்கு செலவுகள் ஏற்படும். சிக்கன நடவடிக்கை மேற்கொள்வது நல்லது. மனதில் தேவையற்ற சஞ்சலம்   உண்டாக அனுமதிக்காதீர்கள். ஓவராய் சிந்தித்தால் குழப்பங்கள் அதிகரிக்கும். சிறிய அளவிலான உடல் நல பாதிப்பு ஏற்படும். எனவே ரிலாக்ஸ் செய்யுங்கள்.

மகரம்

அலுவலகப் பணியில் கூடுதல் பொறுப்புகள் கிடைத்தால் அதை மிகுந்த கவனத்துடன் செய்யுங்கள், தொழில் வியாபாரத்தில் சீரான வளர்ச்சி இருக்கும். ஒரு சிலருக்கு முதலீடுகளை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. பலகாலம் இருந்து வந்த மன வருத்தம் ஒன்றிலிருந்து வெளிவருவீங்க. பணவரவு தாராளமாக இருக்கும். பணம் பல வழிகளிலும் வரும். அலுவலகப் பணிகளை சிறப்பாக முடித்து நல்ல பெயர் எடுப்பீங்க. மருத்துவம், ஆடிட்டர் போன்ற தனியார் தொழிலில் தேவையான உதவிகள் அனைத்தும் கிடைக்கும். வெளிநாட்டிலிருந்து நீண்ட நாளாக எதிர்பார்த்திருந்த தகவல் ஒன்று இப்போது கிடைக்கும். வியாபாரத்தில் புதிய சந்தோஷத் திருப்பம் ஒன்று நிகழும். கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைத்து  மகிழ்ச்சி ஏற்படுத்தும். வீண் செலவுகள் கட்டுப்படுவதால் மனதில் நிம்மதி ஏற்படும். வீடு மற்றும் வாகனத்துக்கான பராமரிப்புச் செலவு ஒன்றிற்குத் தயார் நிலையில் இருங்கள்.

கும்பம்

அலுவலகத்தில் சக ஊழியருக்கு உதவி செய்வதன் மூலம் வாழ்த்தப்படுவீங்க. வியாபார ரீதியாகவோ அல்லது தொழில் ரீதியாகவோ பயணங்கள் மேற்கொள்ள வாய்ப்பு வரும். அது வெளிநாட்டுப் பயணமாகவும் இருக்க வாய்ப்புள்ளது. கடன் தொடர்பான பிரச்னை சுமுகமாக முடிவடையும். தொழில் தொடர்பாக ஓரிரு சிறு உதவிகள் கிடைக்க வாய்ப்புள்ளது. நீண்ட நாளாக எதிர்பார்த்த உத்தியோக ரீதியிலான சலுகைகள் கிடைக்கும். வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் மிகக் கடுமையாக உழைப்பதன்மூலம்  நல்ல லாபம் கிடைக்கப் பெறுவாங்க. பணியிடத்தில் பொறுப்புக்களை நன்றாக நிறைவேற்றினாலும் எதிர்பார்த்த பாராட்டுக்கிடைக்கவில்லை என்று புலம்ப வேண்டாம். வாரக்கடைசியில் குழந்தைகளுக்கு திடீர் நன்மை ஏற்படும். கணவருக்கு / மனைவிக்கு அலுவலகத்தில் நல்ல செய்தி உண்டு.

மீனம்

மருத்துவச் செலவு வெகுவாக குறையும். தாயாரின் உடல் நலத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்கும். இளைய சகோதரர்களால் ஆதாயம் கிடைக்கும். குடும்ப ஒற்றுமை மேலோங்கும். புதிதாக தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் உடையவர்களுக்கு இந்த வாரம் அதற்கான வாய்ப்புகள் அனைத்தும் கிடைக்கும். தாய்வழி உறவினர்களால் ஆதாயம் கிடைக்கும்.  தொழிலில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். ஊழியர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். உற்பத்தியான பொருட்களை உடனுக்குடன் வியாபாரமாகும். வியாபாரத்தில் சீரான லாபம் கிடைக்கும். புதிய வியாபார வாய்ப்புகள் தேடி வரும். நண்பர்களோடு இணைந்து வியாபாரம் செய்யும் வாய்ப்புகளும் ஒரு சிலருக்கு கிடைக்கும். பெண்களுக்கு திருமண முயற்சிகள் கைகூடும். சுயதொழில் தொடங்க நினைக்கும் பெண்களுக்கு இப்பொழுது சரியான வாய்ப்புகள் வரும். திருமணமாகி மழலை பாக்கியத்திற்காக ஏங்கிக் கொண்டிருந்தவர்களுக்கு இந்த வாரம் பாப்பா வருவது பற்றிய நல்ல தகவல் கன்ஃபர்ம் ஆகும். சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் ரொம்பவே கவனமா இருங்கப்பா.

சந்திராஷ்டமம் : செப்டம்பர் 10 முதல் செப்டம்பர் 12 வரை