லக்னோ:
உ.பி. மாநிலத்தில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி, தேசிய கட்சிகளான பாஜக, காங்கிரஸ் கட்சிகளுக்கு எதிராக சமாஜ்வாதி கட்சிக்கும், பகுஜன் சமாஜ் கட்சிக்கும் இடையே கூட்டணி ஏற்பட்டுள்ளது. இந்த கூட்டணியுல் ராஷ்டிரிய லோக்தளம் கட்சியும் இணைந்துள்ளது.
இந்த 3 கட்சிகளின் கூட்டணியில் சமாஜ்வாதி கட்சிக்கு 37 தொகுதிகளும், பகுஜன் சமாஜ் கட்சிக்கு 38 மற்றும் ராஷ்டிரிய லோக் தளம் கட்சிக்கு 3 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டு உள்ளது. மேலும், அமேதி, ரேபரேலி தொகுதிகளில் போட்டியிடும் ராகுல் மற்றும் சோனியா காந்தியை எதிர்த்து, வேட்பாளர்கள் நிறுத்தப் போவதில்லை என்றும் முடிவு செய்துள்ளது.
அதைத்தொடர்ந்து வேட்பாளர்கள் பட்டியில் அறிவிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே சமாஜ்வாதி கட்சி சார்பில் அறிவிக்கப்பட்ட முதல்கட்ட வேட்பாளர் பட்டியலில் கட்சி தலைவர் முலாயம் சிங் பெயர் வெளியிடப்பட்டது. முலாயம் சிங் யாதவுக்கு மெயின்புரி தொகுதி ஒதுக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், ராஷ்டிரிய லோக்தள் கட்சி தனது வேட்பாளர்களை அறிவித்து உள்ளது. இந்த கட்சி சார்பில், முஸாபர்நகர் தொகுதிக்கு அஜித் சிங்கும், பக்பத் தொகுதிக்கு ஜெயந்த் சவுத்திரியும் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.