டெல்லி: டிசம்பர் 1-ந் தேதி முதல் டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையான ராஷ்டிரபதி பவன் மாளிகையை பொதுமக்கள் சுற்றிப்பார்க்க அனுமதி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

டெல்லியில் உள்ள  ஜனாதிபதி மாளிகைசுமார் 15 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது.  இந்த ராஷ்டிரபதி பவன் வளாகத்தில்  சுமார் 2500 கண்கவர் அரியவகை மரங்களை கொண்ட இந்த முகல்  தோட்டம் உள்ளது. இந்த அழகிய தோட்டத்தை பொது மக்கள் பார்வைக்காக காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பார்க்க அனுமதிக்கப்பட்டு வந்தது. கொரோனா காலக்கட்டத்தில், பொதுமக்கள் பார்வைக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது மீண்டும் முகல் தோட்டம் பொதுமக்கள் பார்வைக்கு அனுமதி வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி, அரசு விடுமுறை நாட்கள் தவிர்த்து, புதன், வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு என வாரத்தின் 5 நாட்களில் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள் என ராஷ்டிரபதி பவன் தகவல்கள் தெரிவித்து உள்ளன.  இதை பார்வையிட விரும்புபவர்கள், அதற்கான  இணையதளத்தில் முன்பதிவு செய்து, நேர ஒதுக்கீடு பெற வேண்டும் என்றும்,  அரசு விடுமுறை நாட்கள் தவிர்த்து, புதன், வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு என வாரத்தின் 5 நாட்களில் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளதுடன்,  தலா 1 மணி நேரம் வீதம் காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணிவரையும் 5 வகையான நேரம் ஒதுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், ஜனாதிபதி மாளிகை அருங்காட்சியக வளாகத்தை அரசு விடுமுறை நாட்கள் தவிர்த்து, செவ்வாய்க்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை வாரத்துக்கு 6 நாட்கள் பார்வையிடலாம். மேலும், ஒவ்வொரு சனிக்கிழமையிலும் காலை 8 மணி முதல் 9 மணி வரை ஜனாதிபதி மாளிகை முற்றத்தில், ஜனாதிபதி மெய்க்காவலர்கள் குழு மாற்றப்படும் நிகழ்ச்சியையும் பார்க்க அனுமதி அளிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பார்வையாளர்கள் தங்கள் இடங்களை ஆன்லைனில் http://rashtrapatisachivalaya.gov.in/rbtour இல் பதிவு செய்யலாம்.