கார்த்தி ஜோடியாக சுல்தான் படத்தில் நடிக்கிறார் ராஷ்மிகா மன்தன்னா. இவர் ஏற்கனவே விஜய் தேவேரகொண்டா ஜோடியாக ’கீதா கோவிந்தம்’, ’டியர் காம்ரேட்’ போன்ற தெலுங்கு படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்திருக் கிறார்.


ராஷ்மிகா தனது உடற்கட்டை சிக்கென பராமரித்து வருகிறார். வெயிட் போடா மல் உடலை ஸ்லிம்மாக பராமரிப்பதற்கு காரணம் அவரது ஆரோக்கியமான உணவு பழக்கம்தானாம். அப்படி என்ன சாப்பிடு கிறார். இதோ அவரே சொல்கிறார்.
“எனது ஆரோக்கியமான ஆனால் திருப்தி கரமான ஆரோக்கிய உணவு பான்கேக். எனது ஏமாற்று உணவு ஒரு சாக்லேட் கேக் அல்லது ஒரு ஐஸ்கிரீம் என தெரிவித்தார்.
ஏமாற்று உணவு என்றால் என்ன என்ற போது, ’அது வழக்கமாக எல்லோரும் சாப்பிடுவது. எனது ஆரோக்கிய உணவு பான்கேக்’ என பதில் அளித்தார். ஒவ்வொரு வேளையும் கேக் சாப்பிடும் வசதி படைத்திருக்கும் ராஷ்மிகாவால் மற்றவர்கள் அன்றாடம் எடுத்துக் கொள் ளும் அரிசி வகை உணவெல்லாம் கண் ணுக்கு தெரிவதில்லை. அதனை சாப்பிட் டால் வெயிட் போட்டு குண்டாகி விட வேண்டியதுதான் என்கிறார்,
பான் கேக் சாப்பிட்டு பசியாறும் ராஷ்மிகா ரசிகர்களிடம், ’நீங்கள் என்ன சாப்பிடு கிறீர்கள்’ என்று கேட்டு கடுப்பேற்றி உள்ளார்.
ஒரு சிலர் தங்களின் உணவு வழக்கத்தை அவருக்கு தெரிவித்தாலும் இன்னும் சிலர் அவரை கடுப்பேற்றும் வகையில், ’நீங்கள் கோடி கோடியாக பணம் வைத்திருந் தாலும் நினைத்ததை சாப்பிட முடியாது. நாங்கள் அப்படியில்லை எது நினைக்கி றோமோ அதை வயிறுமுட்ட சாப்பிடு வோம்’ என தெரிவித்திருக்கின்றனர்,
நடிகை ராஷ்மிகா தற்போது அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா’ படத்தில் நடிக்கிறார். வழக்கமான படப்பிடிப்பு இல்லாததால் கூர்க்கில் உள்ள இல்லத்தில் தங்கியுள்ளார்.