தெலுங்கு, தமிழ், இந்தி என பல்வேறு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா.

அல்லு அர்ஜூனுடன் ஜோடியாக நடித்து சமீபத்தில் வெளியான ‘புஷ்பா – தி ரைஸ்’ திரைப்படம் இவருக்கு நல்ல ரீச்சை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து தமிழில் தற்போது விஜயுடன் ‘வாரிசு’ படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

ஹிந்தியில் முதன் முதலாக அமிதாப் பச்சன், நீனா குப்தா நடிக்கும் ‘குட்பை’ படத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.

டி.வி. நிகழ்ச்சி ஒன்றில் ‘குட்பை’ படத்தின் ப்ரோமோவில் கலந்து கொண்டு நடிகர் கோவிந்தா உடன் சேர்ந்து புஷ்பா படத்தின் ‘சாமி சாமி’ பாடலுக்கு நடனமாடி பாலிவுட் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ளார் ராஷ்மிகா மந்தனா.

நாளை இரவு ஒளிபரப்பாக இருக்கும் இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

 

[youtube-feed feed=1]