ஆப்கானிஸ்தான் நாட்டின் டி20 கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக சுழற்பந்து வீச்சாளர் ரஷித்கான் நியமிக்கப்பட்டு உள்ளார். ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித்கான், இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டியில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக அருமையாக விளையாடி வருகிறார்.
இவர் சமீபத்தில், அயர்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தின்போது, 4 ஓவர்கள் வீசிய ரஷித்கான், 27 ரன்கள் மட்டுமே கொடுத்திருந்த நிலையில், 5 விக்கெட்டுகளை மளமளவென சாய்த்து சாதனை படைத்தார்.
அப்போது தொடர்ந்து 4 பந்துகளில் 4 விக்கெட்டுகளை தொடர்ச்சி வீழ்த்தி ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்து, சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட் வரலாற்றில், 4 பந்துகளில் தொடர்ந்து 4 விக்கெட் வீழ்த்திய முதல் வீரர் என்ற உலக சாதனையை பெற்றிருந்தார்.
இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் டெஸ்ட், ஒரு நாள் போட்டி, டி20 அணிகளுக்கு கேப்டனாக இருந்த அஸ்கார் ஆப்கான் நீக்கப்பட்டு, ஆப்கானிஸ்தானில் உள்ள மூன்று அணிக்கும் மூன்று கேப்டன்களை ஆப்கான் கிரிக்கெட் வாரியம் நியமித்துள்ளது.
அதன்படி குல்பாடின் நைப், ஒரு நாள் போட்டிக்கான கேப்டனாகவும் துணை கேப்டனாக ரஷித் கானும் நியிமிக்கப்பட்டு உள்ளனர்.
அதுபோல டெஸ்ட் அணி கேப்டனாக ரமத் ஷாவும் துணை கேப்டனாக ஹஸ்மத் ஷாகிதியும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சுழல்பந்துவீச்சாளர் ரஷித் கான் டி20 கேப்டனாகவும் துணைக்கேப்டனாக ஷபிக்குல்லா ஷபக்கும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தகவலை ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்து உள்ளது.