திருவனந்தபுரம்,
51 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாக கேரளா மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தற்கொலைக்கு முயன்ற, 51வயதுடைய பேரிளம்பெண் ஒருவர் மாஜிஸ்திரேட்டிடம் கொடுத்துள்ள வாக்குமூலத்தின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, கொல்லம் சிட்டி போலீஸ் கமிஷனர் அஜிதா பேகம் கூறியதாவது,
காங்கிரஸ் எம்.எல்.ஏ. வின்சென்ட் அடிக்கடி அந்த பெண்ணுக்கு நேரில் வந்தும், ஃபோன் மூலமாகவும் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும, அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும்,
இதன் காரணமாக தான் கொல்லம் பலராமபுரம் பகுதியை சேர்ந்த அந்த பெண் தற்கொலை செய்ய முயன்றதாகவும், தற்போது நெய்யாற்றின்கரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அந்த பெண், மாஜிஸ்திரேட்டிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
அதன் அடிப்படையில் காங்கிரஸ் எம்எல்ஏ வின்சென்ட் மீது ஐபிசி செக்சன் 376 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.
காங்கிரஸ் எம்.எல்.ஏ. மீது புகார் கொடுக்கப்பட்ட விவகாரம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக எம்.எல்.ஏ.விடம் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆனால், இந்த குற்றச்சாட்டு பொய்யானது என்றும், அடிப்படை ஆதாரமில்லாது என்றம் வின்சென்ட் எம்எல்ஏ மறுப்பு தெரவித்துள்ளார்.