தான் இயக்கும் அடுத்த படம் ‘ராக்கி அவுர் ராணி கி ப்ரேம் கஹானி’ என்று இயக்குநர் கரண் ஜோஹர் அறிவித்துள்ளார்.

குறுகிய கால இயக்கம் மற்றும் தயாரிப்பாக இந்தப் படத்தை கரண் ஜோஹர் அறிவித்துள்ளதாகத் தெரிகிறது. இந்தப் படத்தில், ரன்வீர் சிங், ஆலியா பட் நடிக்கின்றனர்.

மேலும், ஜெயா பச்சன், ஷபனா ஆஸ்மி, தர்மேந்திரா உள்ளிட்டோரும் இதில் நடிக்கின்றனர்.

இன்று ரன்வீரின் பிறந்த நாளை முன்னிட்டு இந்தச் செய்தியை கரண் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்தார்.

இதுபற்றிப் பகிர்ந்திருக்கும் ரன்வீர் சிங், “எனது விசேஷ நாளில் ஒரு விசேஷமான அறிவிப்பு. உங்களை வசீகரிக்க 2022ஆம் ஆண்டு திரைக்கு வருகிறது” என்று குறிப்பிட்டுள்ளார். இந்தப் படம் 2022ஆம் ஆண்டு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இஷிதா மொய்த்ரா, சஷாங் கைதான் மற்றும் சுமித் ராய் ஆகியோர் இந்தப் படத்துக்கான திரைக்கதையை எழுதுகின்றனர். இந்தப் படத்தின் மோஷன் போஸ்டரையும் கரண் வெளியிட்டுள்ளார்.

கரண் ஜோஹர் ‘சூர்ய வன்ஷி’, ‘பிரம்மாஸ்திரா’ ஆகிய படங்களைத் தயாரித்து வருகிறார். விஜய் தேவரகொண்டாவின் ‘லைகர்’ படத்தையும் இணைந்து தயாரித்து வருகிறார்