புதுச்சேரி:
புதுச்சேரி முதலமைச்சர் வேட்பாளர் ரங்கசாமி தனது வெற்றி பெற்ற சான்றிதழைப் பெற தனது இருசக்கர வாகனத்தில் தேர்தல் அலுவலகத்திற்கு சென்றார்.
புதுச்சேரியில் காங்கிரஸ் – தி.மு.க. கூட்டணி ஆட்சி முடியும் தருவாயில் ஆளுங்கட்சி அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ஒவ்வொருவராக ராஜினாமா செய்து பா.ஜ.வில் ஐக்கியமாகினர். இதனால் மெஜாரிட்டியை இழந்த நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அமைச்சரவை கவிழ்ந்தது.
இந்நிலையில் புதுச்சேரி சட்டசபைக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. புதுச்சேரியில் 30 சட்டசபை தொகுதிகள். 10 லட்சத்து 4507 வாக்காளர்களுக்கு 1558 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டு ஏப். 6ம் தேதி ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடந்து முடிந்தது. 81.64 சதவீதம் ஓட்டு பதிவானது.காங்கிரஸ் – தி.மு.க., கூட்டணியில் காங்கிரஸ் 15 தொகுதிகளை பெற்றது. ஏனாம் தொகுதியில் போட்டியிட வேட்பாளர் இல்லாததால் 14 தொகுதியில் மட்டுமே காங்கிரஸ் போட்டியிட்டது. தி.மு.க. – 13 வி.சி. மற்றும் இந்திய கம்யூ. கட்சி தலா ஒரு தொகுதியில் போட்டியிட்டன.
என்.ஆர்.காங்கிரஸ் – பா.ஜ. – அ.தி.மு.க. கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் -16 ;பா.ஜ. – 9 அ.தி.மு.க. – 5 தொகுதியில் போட்டியிட்டன. மொத்தமுள்ள 30 தொகுதியில் 16 தொகுதிகளில் வெற்றி பெறும் கட்சி தனித்து ஆட்சி அமைக்கலாம். ஓட்டு எண்ணிக்கை நேற்று காலை 8:00 மணிக்கு துவங்கி இரவு 11:00க்கு முடிந்தது. புதுச்சேரியில் மூன்று இடங்களிலும் காரைக்காலில் இரண்டு மாகி ஏனாமில் தலா ஒரு மையத்திலும் ஓட்டு எண்ணும் பணி நடந்தது.
என்.ஆர்.காங்கிரஸ் கட்சி 10 தொகுதிகளிலும் பா.ஜ. ஆறு தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளதால் புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் – பா.ஜ. கூட்டணி ஆட்சி அமைகிறது.
இந்நிலையில், புதுச்சேரி முதலமைச்சர் வேட்பாளர் ரங்கசாமி தனது வெற்றி பெற்ற சான்றிதழைப் பெற தனது இருசக்கர வாகனத்தில் தேர்தல் அலுவலகத்திற்கு சென்றார்.
இதுதொடர்பான வீடியோ சமூக வலை தளங்களில் வைரளாகி வருகிறது.