எச்.வினோத் இயக்கி வரும் ‘நேர் கொண்ட பார்வை’ படத்தில் அஜித் வக்கீலாக நடித்து வருகிறார்.இவருடன் இணைந்து பிரபல பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டேவும் நடித்துள்ளார்.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் ரங்கராஜ் பாண்டே அஜீத்தை பற்றி பெருமையுடன் கூறியுள்ளார் .
‘‘அஜித்துடன் நடித்தது அற்புதமான அனுபவம். எல்லோரும் சொல்வதுபோல அவர் அற்புதமான மனிதராக இருக்கிறார். மிகவும் ஆச்சர்யப்படும் வகையில் பழகுகிறார். பழக கூடியவர்களுக்கு உயிரையே கொடுக்கும் மனநிலையில் இருக்கிறார். ஆச்சர்யங்கள் நிறைந்தவர். அதை நான் அனுபவித்திருக்கிறேன். 15 நாட்கள் அவருடன் இருக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது ’’ என பாண்டே அடுக்கி கொண்டே போகிறார்.